இந்தியாவுக்கு எதிரான போருக்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டதாக சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிக்கிம் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் என சீனா கூறி வருகிறது. இது குறித்து இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 50 நாள்கள் ஆன நிலையில், இந்தியாவுக்கு சீன ஊடகங்கம் எச்சரிக்கை விடுத்து கருத்து தெரிவித்துள்ளது. டோக்லாம் பகுதியிலிருந்து தங்களின் படைகளை இந்தியா திரும்பப் பெறாதவரை, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 


இரு நாடுகள் இடையிலான பிரச்னை தொடங்கி 7வது வாரத்தைக் கடந்த நிலையில், அமைதி தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதாகவும் அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த விவகாரம் குறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை அதிகாரி வாங் லீ, தோக்லாம் பகுதியில் படைகளைக் குவிக்கும் இந்தியாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பகுதி போல மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம் இந்தியா-சீனா இடையே அதிகம் இருக்கிறது. 


இருநாடுகளின் எல்லைகளும், நேபாளத்தில் எல்லையும் சந்திக்கும் உத்தராகண்ட்டின் கல்பானி பகுதி மற்றும் பாகிஸ்தானுடனான எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆகிய பகுதிகளுக்குள் சீன ராணுவம் நுழைந்தால், அதை இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினார்.