Covid Vaccine Update: அமெரிக்காவில் Pfizer தடுப்பூசிக்கு முழுமையான அனுமதி
Covid Vaccine Update: திங்களன்று ஃபைசரின் (Pfizer) கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியை அமெரிக்கா `முழுமையாக` அங்கீகரித்துள்ளது.
வாஷிங்டன்: திங்களன்று அமெரிக்கா கொரோனா தடுப்பூசி ஃபைசரை (Pfizer) முழுமையாக அங்கீகரித்தது, இது தடுப்பூசி குறித்த மக்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. நாடு கொரோனா வைரஸின் (COVID-19 Virus) மிகவும் ஆபத்தான டெல்டா வகையை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் கிடைத்துள்ளது.
அமெரிக்கா பாதுகாப்பாக கருதப்படுகிறது
ஃபைசர் (Pfizer) மற்றும் அதன் பங்குதாரர் பயோஎன்டெக் (BioNTech) உருவாக்கிய தடுப்பூசி (Vaccination) அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) முழு ஒப்புதலைப் பெற்றுள்ளது, இதற்கு முன்பு தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து முடிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. இப்போது ஃபைசர் அமெரிக்காவில் பாதுகாப்பான தடுப்பூசியாக கருதப்படலாம்.
ALSO READ | இந்தியாவிற்கு வர தயாராகும் மாடர்னா; பைசர் மற்றும் பிற தடுப்பூசிகள் நிலை என்ன?
ஃபைசர் தடுப்பூசியின் அவசர பயன்பாடு அமெரிக்காவில் டிசம்பரில் தொடங்கியது, அதன் பின்னர் 200 மில்லியனுக்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட்டது. "இந்த தடுப்பூசி ஒரு தயாரிப்புக்கு ஒப்புதல் அளிக்க FDA க்குத் தேவைப்படும் உயர்தர பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை பூர்த்தி செய்கிறது என்று பொதுமக்கள் முழு நம்பிக்கையுடன் இருக்க முடியும்" என்று FDA இன் செயல் ஆணையர் ஜேனட் வூட்காக் கூறினார்.
உலகின் முதல் தடுப்பூசி
ஃபைசரின் கூற்றுப்படி, இந்த தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அளித்த முதல் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது, மேலும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா, ஒரு அறிக்கையில், இந்த முடிவு எங்கள் தடுப்பூசி மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் 200 மில்லியன் டோசுக்கு அதிகமான அளவு ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில இந்தத் தடுப்பூசி இனி கோமிர்நேட்டி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. மேலும் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு இதை செலுத்துவதற்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஃபைசர் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதில் 91 சதவிகிதம் வெற்றி கண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Covid Vaccine: 12-15 வயதினருக்கு தடுப்பூசி போட ஐரோப்பிய மருந்து அமைப்பு அங்கீகாரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR