பாகிஸ்தானில் ஒரு குடும்பத்தில், தந்தை வீட்டிற்கு தீ வைத்து, தனது இரண்டு மகள்களையும், அவர்களது நான்கு குழந்தைகளையும் வீட்டை தீ வைத்து கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. தனது ஒரு பெண் தனது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், அந்த தந்தை அந்த கொடூர செயலை செய்ததாக  போலீசார் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பாகிஸ்தானின் முசாபர்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சகோதரிகளான ஃபவுசியா பீபி மற்றும் குர்ஷித் மாய் இருந்த விட்டிற்கு தீ வைத்தததில் குரிஷ் மாய் அவர்களின் கணவரும் இறந்து விட்டார். வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் மஞ்சூர் உசேனை போலீசார்  தேடி வருகின்றனர் என்று போலீஸ் அதிகாரி அப்துல் மஜீத் தொலைபேசி மூலம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.


பீபி, 18 மாதங்களுக்கு முன்பு, மெஹபூப் அகமதுவை தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம்  செய்து கொண்டார். "காதல் திருமணம் தொடர்பாக இரு குடும்பங்களுக்கிடையேயான சண்டையின் விளைவுதான் இந்த சம்பவம்" என்று மஜீத் மேலும் கூறினார். போலீஸாரால் தேடப்படும் தந்தை ஹுசைன் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.


ALSO READ: Taliban vs good: உலகமே பாராட்டும் வகையில் தாலிபான்கள் செய்த காரியம் என்ன? 


பீபியின் கணவர் அஹ்மத் தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் இல்லை. அதிகாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீடு தீப்பிடித்து எரிந்ததை அறிந்து கொண்டார் என காவல் துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.


இரண்டு, ஆறு மற்றும் 13 வயதுடைய மாயின் மூன்று குழந்தைகளுடன் அவரது நான்கு மாத மகன் இறந்துவிட்டதாக அஹ்மத் கூறினார்.  ஒவ்வொரு வருடமும் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதியின்றி திருமணம் செய்ததற்காக அல்லது அவர்களது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக உறவினர்களால் கொல்லப்படுகிறார்கள் என பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது.


ஆப்கானில் பயங்கரம்: குழந்தையை தூக்கிலிட்ட கொடூர தாலிபான்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR