திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, மைனர் ஒருவருக்கு முத்தமிட்டு, "நாக்கை உறிஞ்சுங்கள்" என்று கூறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உலகெங்கிலும் உள்ள இணைய பயனர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்கிறது, மத நடைமுறைகளின் வரம்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களின் "சலுகைகள்" ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் வீடியோவுக்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், தலாய் லாமா மரியாதை செலுத்துவதற்காக குழந்தையின் உதட்டில் முத்தமிடுவதைக் காணலாம். ஆன்மீகத் தலைவர் சிறுவனிடம் நாக்கை உறிஞ்ச முடியுமா என்று கேட்கிறார். பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதுடன், இந்த செயலை "அருவருப்பானது", "கேவலமானது" "கண்டனத்திற்குரியது" என்று குறிப்பிட்டனர்.



ஆனால், சிலர் மட்டும், இது திபெத்திய புத்த மதத்துடன் தொடர்புடைய ஒரு மதப் பகுத்தறிவைக் கொண்டிருக்கலாம் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.


பயனர்களில் ஒருவர், இது திபெத்திய பௌத்தத்தில் ஒரு பிரபலமான நடைமுறை என்றும், 9 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது என்றும் கூறினார். இதற்கு, சில பாரம்பரிய மத நடைமுறைகளை இன்றைய உலகத்திற்கு ஏற்றவாறு, தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


"திபெத்தில், உங்கள் நாக்கை வெளியே நீட்வி வணக்கம் சொல்வது ஒரு மதிப்பிற்குரிய நடைமுறை என்று பிபிசி தெரிவித்துள்ளது. " 9 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த வழக்கம் தொடர்கிறது. கறுப்பு நாக்கிற்கு பெயர் பெற்ற லாங் தர்மா என்ற தீய மன்னனின் காலத்திலிருந்து தொடரும் இது ஒரு பாரம்பரியம். திபெத்தில் உள்ள மக்கள், தாங்கள் அவருடைய மறுபிறவி இல்லை என்பதை நிரூபிக்க நாக்கை வெளியே நீட்டினர் என்று ஒரு டிவிட்டர் பதிவு கூறுகிறது.



"இது ஒரு ஆபத்தான காட்சி! கடந்த காலத்தில் NXIVM உடன் தொடர்பு வைத்திருந்த தலாய் லாமா, ஒரு இந்திய சிறுவனுடன் இப்படி நடந்துக் கொள்வது,முயற்சிப்பது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிறுவனின் உடல் மொழியை பார்க்கும்போது, அவர் தயங்குவதை வீடியோவில் தெளிவாகக் காணலாம். "என் நாக்கை உறிஞ்சு" என்று தலாய் லாமா கூறுவது போல், தலையை மேல்நோக்கி தூக்குகிறார் என்று ஒரு பயனர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... முதலமைச்சர் ஸ்டாலின்


தலாய் லாமா சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், "கவர்ச்சிகரமானதாக" இருக்க வேண்டும் என்று கூறி, ஒரு பெண் தோற்றத்தைப் பற்றி கூறிய கருத்துக்கள் உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பை எழுப்பியது.


தலாய் லாமாவின் கருத்துக்கள் "பாலியல் சார்ந்தவை" என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் இருந்து கண்டனத்தை பெற்றது. பின்னர் தலாய் லாமா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டார்.


தலாய் லாமா பௌத்தர்களிடையே மதிக்கப்படும் நபராகவும், திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகவும் உள்ளார். கடந்த மாதம், அவர் எட்டு வயது சிறுவனுக்குக் 10வது கல்கா ஜெட்சன் தம்பா ரின்போச்சே என்று பெயரிட்டார், இது திபெத்திய பௌத்தத்தில் மூன்றாவது மிக உயர்ந்த தரவரிசை ஆகும்.


தலாய் லாமா திபெத்தில் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டிய சீனாவை இந்த நடவடிக்கை மேலும் எரிச்சலடையச் செய்யும். தலாய் லாமா தற்போது இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் வசிக்கிறார்.


மேலும் படிக்க | இளைஞர்களே உஷார்! இன்ஸ்டாவில் நிர்வாண படத்தை அனுப்பி பணம் பறிக்கும் பெண்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ