நிக்கோசியா: கொரோனா வைரஸின் மற்றொரு மாறுபாடு உருவாகியுள்ளது, இதற்கு 'டெல்டாக்ரான்' (Deltacron) என்று பெயரிடப்பட்டுள்ளது. சைப்ரஸில் (Cyprus) காணப்படும் இந்த புதிய மாறுபாட்டால் தற்போது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டாக்ரானின் மரபணு பின்னணியானது கொரோனாவின் டெல்டா மாறுபாட்டைப் போன்றது, அத்துடம் இது ஒமிக்ரான் போன்ற சில மியூடேஷனையும் கொண்டுள்ளதால், இதற்கு டெல்டாக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமிக்ரான் 10 மியூடேஷன் கண்டறிந்தது
'டெய்லி ஸ்டார்' அறிக்கையின்படி, சைப்ரஸில் 'டெல்டாக்ரான்' நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் ஒமிக்ரானின் 10 மியூடேஷன் இருப்பது கண்டறியப்பட்டது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் (Omicron) இணைவதன் மூலம் இந்த திரிபு தயாரிக்கப்பட்டது என்று சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே மியூடேஷன் தீவிரம் அதிகமாக இருப்பதாக அவர் கூறினார், இது புதிய மாறுபாட்டிற்கும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது.


ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்
ஒமிக்ரான் மற்றும் டெல்டா ஆகியவை (Corona Spread) தற்போது உலகில் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இந்த புதிய மாறுபாடு இரண்டிற்கும் இடையேயான கலவையான மாற்றத்தால் வடிவமைக்கப்படுவதாகவும் கோஸ்ட்ரிக்ஸ் கூறினார். இந்த மாறுபாடு டெல்டாவின் அதே மரபணு பின்னணியைக் கொண்டுள்ளது. ஒமிக்ரானில் இருந்தும் சில மியூடேஷன் இதில் உள்ளன. 


புதிய வைரஸ் Omicron ஐ விட பலவீனமாக இருக்குமா
ஒமிக்ரானுடன் ஒப்பிடும்போது டெல்டாக்ரான் மாறுபாடு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது முழுமையான ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். ஆனால் எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்த புதிய வைரஸானது ஒமிக்ரான் மாறுபாட்டை விட சற்று பலவீனமாது தான். 


ALSO READ | இதுதான் முக்கியம்.. IHU மாறுபாட்டின் புதிய அறிகுறிகள்.. கவனம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR