இலங்கையில் நேற்று 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் நேற்று இப்பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். தேவாலயங்களில் பிரார்த்தனைகள் நடந்தன.  இந்நிலையில், நேற்று காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், தலைநகர் கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 


அதே நேரத்தில், கொழும்பு அருகே கடலோர நகரமான நிகாம்போவில் உள்ள புனித செபஸ்தியார் உள்ளிட்ட 3 கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குண்டு வெடித்தது. அதுமட்டும் இன்றி மேலும், 4 நடசத்திர விடுதிகள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நிகழந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். 


இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 இந்தியர்கள் உள்பட 35 பேர் வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ், ஆகிய மூன்று இந்தியர் உயிரிழந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனுமந்த்ராயப்பா, ரங்கப்பா ஆகிய மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.