குழந்தைகளே இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது என்று ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது. பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையும் தற்போதைய போக்கு தொடர்ந்தால் நாடே இல்லாத நிலை உருவாகிவிடும் என்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் நெருங்கிய உதவியாளர் மார்ச் மாதத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் முறையாக, ஜப்பானில் 2022 ஆம் ஆண்டில் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 10 மில்லியனுக்கும் கீழே குறைந்தது. மக்கள்தொகை, அபாயகரமான அளவுக்கு குறைவது தொடர்பாக அண்மைக் காலமாக நாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்திய தரவுகள், ஜப்பானின் எதிர்காலம் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.  
 
ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் 9.917 மில்லியனாக உள்ளன. 2019 தரவுகளிலிருந்து 3.4 சதவீத புள்ளிகள் குறைந்தும், மொத்தத்தில் 18.3 சதவீதமாகவும் மக்கள் தொகை அதிகரிப்பு குறைந்துள்ளது.


பல குடும்பங்களில், அதாவது ஏறக்குறைய பாதியளவு குடும்பங்களில் (49.3 சதவீதம்) ஒரே ஒரு குழந்தை உள்ளது, 38 சதவீதம் பேருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 12.7 சதவீதமாக உள்ளது.


ஜப்பான் காணமல் போய்விடும்
மார்ச் மாதம், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் நெருங்கிய உதவியாளர் மசாகோ மோரி, தற்போதைய பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்தால், ஜப்பான் என்ற ஆசிய நாடு இல்லாமல் போகலாம் என்று கூறினார். "இப்படியே போனால் நாடு காணாமல் போய்விடும். மக்கள்தொகையில் ஏற்படும் அபாயகரமான வீழ்ச்சி, எஞ்சியிருக்கும் வாழ வேண்டிய மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும். இது, எதிர்கால குழந்தைகளை தாக்கும் பயங்கரமான பிரச்சனை" என எச்சரித்தார்.


மேலும் படிக்க | தனிமை மற்றும் சமூக தனிமைப்படுத்தலை சமாளிக்க சட்டத்தை இயற்றிய ஜப்பான்


மக்கள்தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி


"மக்கள்தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி என்பது படிப்படியாக வீழ்ச்சியடையவில்லை, அது நேராக கீழே செல்கிறது. இது, பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிதைந்து, சுருங்கி, செயல்படும் திறனை இழக்கும் ஒரு சமூகமாக ஜப்பானை மாற்றிவிடும்" என்று அவர் மேலும் கூறினார்.


மக்கள்தொகையை 1899 இல் பதிவுசெய்யத் தொடங்கிய ஜப்பான் நாட்டில், கடந்த ஆண்டு தான் மிக குறைந்த அளவு குழந்தைகள் பிறந்துள்ளனர். 2022ஆம் ஆண்டில் ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 800,000 க்கும் குறைவாகக் குறைந்துள்ளது என்ற தரவுகள் வெளியான பிறகு மசாகோ மோரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இறப்பு எண்ணிக்கை அதிகம்


கடந்த ஆண்டு ஜப்பானில் இறப்பு எண்ணிக்கை 1.58 மில்லியன் என்ற நிலையில், பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 799,728 என்பது, பிறப்பை விட இரு மடங்கு இறப்பு நாட்டில் பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு, ஒரு தசாப்த கால போக்கின் தொடர்ச்சியாகும், இதுவே, ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில்  840,832 மற்றும் 2021 இல் அதைவிட 3.5 சதவீதம் குக்றைந்து 811,604 என்றும் பதிவானது.


மேலும் படிக்க | ஆய்வகங்களில் குழந்தைகள் பிறக்க வைப்பதை சாத்தியப்படுத்தும் ஜப்பான் டெக்னாலஜி!


ஜப்பானில் பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சி 
பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சியானது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான ஜப்பானுக்கு நல்லதல்ல. இறப்பு எண்ணிக்கைக்கு சமமான குழந்தைகள் பிறக்காவிட்டால், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும்.


ஜப்பான் ஏற்கனவே நடுத்தர வயதினர் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதாவது, தோராயமாக 45 - 55  வயதுடைய மக்களே ஜப்பான் நாட்டில் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றனர். மக்கள்தொகையில் 28 சதவீதம் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாததால், ஜப்பான் பொருளாதாரம் மிகப் பெரிய முட்டுக்கட்டையை எதிர்கொள்ளலாம்.


மக்கள்தொகை பற்றி பேசிய ஜப்பான் பிரதமர் கிஷிடா, நிலைமை மோசமாக இருப்பதாகவும், இனியும் இந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.  


"ஒரு சமூகமாக நாம் தொடர்ந்து செயல்பட முடியுமா என்ற விளிம்பில் ஜப்பான் நிற்கிறது. குழந்தைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்துவது காத்திருக்க முடியாத மற்றும் ஒத்திவைக்க முடியாத ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது" என்று ஜப்பான் பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்


மேலும் படிக்க | செக்ஸ் ஒப்புதல் வயது ஜப்பானில் மாற்றம்... இனி 16 வயது தான் - ஏன் இது ரொம்ப முக்கியம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ