ஆப்கானிஸ்தானில் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. காபூலின் பழைய பொருட்கள் விற்கப்படும் சந்தையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இவர்கள் வாங்குவதற்காக வரவில்லை. தங்கள் பொருட்களை விற்பதற்காக வந்திருக்கிறார்கள்.  அவர்களிடம் பணம் ஏதும் இல்லாத காரணத்தினால், தங்களிடம் இருக்கும் பொருட்களை விற்று சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரக்தி நிலையில் உள்ள ஆப்கான் மக்கள் எப்படியாவது தாலிபான் ஆட்சியில் இருந்து தப்பித்து விட வேண்டும் என முயற்சிக்கிறார்கள். உணவுக்காக கூட பணம் இல்லாத நிலையில், குறைந்த விலையில் தங்கள் பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


மெத்தைகள், கண்ணாடிகள், சமையலறை உபகரணங்கள், 1990 களின் தொலைக்காட்சிப் பெட்டிகள், பழைய சிங்கர் தையல் இயந்திரங்கள் போன்ற பல பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன


ALSO READ | Viral Pics: தாலிபான் ஆட்சிக்கு முன் ஆப்கானில் சுதந்திர பறவைகளாக இருந்த பெண்கள்


தலிபான்கள்  (Taliban Jihadis) நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானியர்கள் வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை. குடிமக்கள் வங்கி கணக்குகளிலிருந்து வாரத்திற்கு $200 எடுக்கலாம் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.  நாட்டில், கடும் பணம் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


சந்தையில் தனது இரண்டு போர்வைகளை விற்க முயன்ற முகமது எஹ்சான், "எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை, நாங்கள் ஏழைகள், நாங்கள் வீட்டுப் பொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" என்றார்.


கட்டிட தொழிலாளியான எஹ்சான் வேலை செய்து வந்த கட்டிடத்தின் கட்டுமான திட்டம் ரத்து செய்யப்பட்டது. "காபூலில் இருந்த பணக்காரர்கள், அனைவரும் தப்பித்துவிட்டனர். நாங்கள் தன அல்லல் படுகிறோம்" என்று எஹ்சான் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.


எஹ்சானை போல் பல ஆப்கானியர்கள் உள்ளனர். அவர்கள் சந்தைகளுக்கு வந்து, தங்கள் உடமைகளை அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்கின்றனர். அவர்கள் தங்கள் உடைமைகளை முதுகில் சுமந்து செல்வதையோ அல்லது தெரு வண்டிகளில் அவற்றை உருட்டிக் கொண்டு செல்வதையோ காணலாம்.


ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதிலிருந்து, அங்கு வாழ்க்கை நாளுக்கு நாள் நரகமாகிக் கொண்டிருக்கிறது. 


ALSO READ | அதிர்ச்சித் தகவல்! பெண்ணின் சடலங்களுடனும் உடல் உறவு கொள்ளும் தாலிபான்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR