சமீபகாலமாக விவாகரத்து பெற்றுவிட்டு அதை கொண்டாடுவது என்பது ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டிருக்கிறது. மிகச் சமீபமாக சீரியல் நடிகை ஷாலினி என்பவர் கூட தனது விவாகரத்தை கொண்டாடும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.அது இணையத்தில் மிகவும் வைரலானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதெல்லாம் ஒருபுறம் இருக்க தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியேறி பின்னர் அதை கொண்டாடுவது என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் அந்த வகையான கொண்டாட்டங்கள் எல்லை மீறி போகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது .அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.


பிரேசில் நாட்டை சேர்ந்த 22 வயதான நபர் ரஃபேல் டோஸ் சாண்டோஸ் டோஸ்டா . இவருக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து ஆகியுள்ளது. இந்நிலையில் விவாகரத்து ஆனதை கொண்டாட நினைத்த அவர் bungee jumping எனப்படும் உயரமான இடத்திலிருந்து கயிறு கட்டி கீழே குதிக்கும் சாகசத்தை செய்ய நினைத்துள்ளார். இதனை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் விஜய் குஷி படத்தில் ஒரு பாடலில் கயிறு கட்டிக்கொண்டு தலைகீழாக குதிப்பதை தான் bungee jumping  என்பார்கள்


இந்த இடத்தில் ரஃபேல் bungee jumping  செய்ய தேர்வு செய்தது ஒரு கைவிடப்பட்ட குவாரி. அதில் கிட்டத்தட்ட 70 அடி உயரத்திலிருந்து கயிறு கட்டிக் கொண்டு தலைகீழாக குதிக்க முடிவு செய்துள்ளார். பின்னர் அவர் தலைகீழாக குதிக்கும் போது துரதிஷ்டவசமாக அந்தக் கயிறு அறுந்துள்ளது. இதனால் அவர் அருகில் இருந்த தண்ணீர் குட்டையில் விழுந்து மூழ்கியுள்ளார். ஆனால் நல்வாய்ப்பாக அவர் காப்பாற்றப்பட்டு விட்டார். இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கழுத்து முதுகு எலும்பு முறிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது


கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டாலும் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவரால் இன்னும் அதில் இருந்து முழுமையாக மீளவில்லை. தன்னுடைய அன்றாட வேலைகளை பிறர் உதவி இல்லாமல் செய்ய முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் முன்பு பணியாற்றிய வேலையை கூட இழந்து விட்டார்.


மேலும் படிக்க |  திருமணத்தில் இப்படியும் செய்வாங்களா? மணமகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் சடங்கு


இது பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ரபேல் திருமணத்திற்கு முன்பு தான் ஒரு அமைதியான நபர் என்றும் ஆனால் திருமணம் முடிந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது என்றும் கூறியுள்ளார். விவாகரத்துக்கு பிறகு தான் எல்லா வகையிலும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பியதாகவும் அதனாலையே தனது உயிருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இப்படி ஒரு சாகசத்தை செய்ய நினைத்ததாகவும் கூறியுள்ளார்


கஷ்டம் வரும் சூழ்நிலையில் அதனை கொண்டாடுவது வாழ்க்கையை நேர்மறையான வகையில் எடுத்துச் செல்வது நல்ல விஷயம் தான். இது ஒரு பக்கம் இருந்தாலும் உயிரோடு ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் அவசியமான ஒன்று. கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடவே கூடாது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்று.


மேலும் படிக்க | மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டியாளர் சியன்னா வீர் பரிதாப மரணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ