World News: விமானத்தில் பயணம் செய்தபோது, 14 வயது சிறுமியின் அருகில் சுய இன்பத்தில் ஈடுபட்டதற்காக 33 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மருத்துவர் ஒருவரை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) கைது செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்தாண்டு நடந்துள்ளது


அமெரிக்காவின் ஹொனலுலுவில் இருந்து பாஸ்டன் செல்லும் விமானத்தில் கடந்தாண்டு மே மாதம் இச்சம்பவம் நடந்ததாக அமெரிக்க அட்டர்னி அலுவலகம் தெரிவித்துள்ளது. மாசசூசெட்ஸைச் சேர்ந்த டாக்டர். சுதிப்தா மொஹந்தி என்பவரை கடந்த வியாழக்கிழமை (ஆக. 10) அன்று FBI கைதுசெய்துள்ளது. அமெரிக்காவின் சிறப்பு விமான அதிகார வரம்பில் இருந்தபோது ஒரு மோசமான, அநாகரீகமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


விமானத்தில் சம்பவம்


பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மையத்தின் முதன்மை பராமரிப்பு மருத்துவராக கைதுசெய்யப்பட்ட மொஹந்தி பணியாற்றி வந்தார் என தகவல்கள் கூறுகின்றன. தகவல்களின் அடிப்படையில், கடந்தாண்டு அவர் ஒரு பெண் துணையுடன் விமானத்தில் சென்று கொண்டிருந்தார். 


மேலும் படிக்க | திருமணத்தில் லட்சக்கணக்கில் கல்லாக்கட்டும் 'மணப்பெண் தோழி' - அது எப்படி?


சிறுமி அதிரிச்சி


அதே விமானத்தில், 14 வயது சிறுமி அவரது தாத்தா, பாட்டியுடன் பயணித்துள்ளது. அந்த சிறுமி மருத்துவர் மொஹந்தியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். விமான பயணத்தின் பாதி வழியில், 33 வயதான அவர் கழுத்து வரை போர்வையால் தன்னை மூடிக்கொண்டதையும், அவரது கால் பகுதி மேலும் கீழும் துள்ளுவதையும் சிறுமி கவனித்துள்ளார். 


சிறிது நேரத்திற்குப் பிறகு, போர்வை தரையில் இருப்பதையும், மருத்துவர் மூடாமல் இருப்பதையும், மொகந்தி சுய இன்பத்தில் ஈடுபட்டதையும் சிறுமி கவனித்திருக்கிறார். அந்த சிறுமி, அப்போது விமானத்தில் காலியாக இருந்த பகுதிக்கு அதாவது வேறு வரிசையில் இருந்த இருக்கையில் மாறி அமர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. 


மறுத்த மருத்துவர்


பாஸ்டனில் தரையிறங்கிய பிறகு, சிறுமி சம்பவம் குறித்து தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், மருத்துவர் மொஹந்தி விசாரணையின் போது குற்றச்சாட்டுகளை மறுத்தார் என கூறப்படுகிறது. அதாவது, "எனக்கு இந்த சம்பவம் பற்றி நினைவில் இல்லை" என்று அவர் கூறியுள்ளார். 


அந்த வகையில், மருத்துவர் மொஹந்தி கடந்த ஆக. 10ஆம் தேதி அன்று ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜரானார். விமானத்தில் இருந்த ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் முன் அநாகரீகமான செயலைச் செய்ததாக அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. 


தண்டனையும் விடுதலையும்


இந்த குற்றச்சாட்டுக்கு 90 நாட்கள் வரை சிறைத்தண்டனையும், ஒரு வருடம் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலையும் மற்றும் 5,000 அமெரிக்க டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும். 18 வயதிற்குட்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது மற்றும் அவர்கள் கூடும் இடங்கள் போன்ற நிபந்தனைகளுடன் அவர் தனிப்பட்ட அங்கீகாரத்தின் பேரில் பின்னர் விடுவிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | Grey Divorce: ‘கிரே டிவோர்ஸ்” என்றால் என்ன? 50 வயசுக்கு மேல திருமண முறிவு அவசியமா?
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ