நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான வழக்கு ஒன்றில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை தான் என்று உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. முன்னாள் அதிபர் மட்டுமல்ல, அடுத்து வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் டொனால்ட் டிரம்ப்பின் மீதான வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது, தேர்தலில் அவரது நிலைமையை மோசமாக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மகன்கள்


தொழில்திபரான டொனால்ட் டிரம்ப், ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் என டொனால்ட் டிரம்பின் இரு மகன்களும் தந்தையின் தொழிலில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.


மோசடியில் ஈடுபட்ட நிறுவனம்


கடந்த சில வருடங்களாக தனது நிறுவனம் மூலம் சம்பாதித்த வருமானத்திற்கு டிரம்ப் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக நீதிமன்ற விசாரணையில் இருந்த வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு எதிராக தீர்ப்பு வெளியானது.


டொனால்ட் டிரம்ப் மீதான சிவில் மோசடி வழக்கு 


சிவில் மோசடி வழக்கில் டொனால்ட் டிரம்ப்பிற்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்த நியூயார்க் நீதிமன்றம் இந்த விஷயத்தில் கடுமையான அபராதத்தை விதித்தது ஏன் தெரியுமா?


மேலும் படிக்க | Hindutva: இந்துத்வா எதிர்ப்பு அவசியமா? எதிர்கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் அமைக்கும் பிரசாந்த் கிஷோர்!


காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றியது


காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நபர்களை ஏமாற்றியதாகவும் டொனால்ட் டிரம்பின் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. டிரம்பின் நிறுவனம், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற நபர்களை ஏமாற்றி ரியல் எஸ்டேட் செய்ததாக வும், அதிக லாபம் பெறுவதற்காக மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.  


முந்தைய முடிவை ரத்து செய்த நீதிமன்றம்
டொனால்ட் டிரம்பின் ரியல் எஸ்டேட்டைக் கையாளும் நிறுவனங்களைக் கலைக்கும் தனது முந்தைய முடிவை நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தகக்து. டிரம்பின் வணிகங்களைக் கண்காணிக்க ஒரு சுயாதீன கண்காணிப்பாளரை அவர் நியமிப்பதால் இது தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.


வங்கியாளர்களுக்கு கடன்களை வழங்குவதற்காக தங்கள் சொத்தை மிகைப்படுத்தி காட்டியிருப்பதாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பாதித்த வருமானத்திற்கு டிரம்ப் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்பதை வழக்கின் விசாரணை உறுதி செய்வதாக, வழக்கை சுமார் இரண்டரை மாதம் விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


மேலும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் டெல்லி அரசு! கேஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை!


நீதிபதியின் தீர்ப்பு


நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் இந்த வழக்கை தாக்கல் செய்து இருந்தார். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆர்தர் எங்கோரோன், இந்த வழக்கில், டொனால்ட் டிரம்ப் 355 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2900 கோடி ருபாய்) அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார். அதுமட்டுமல்ல, டொனால்ட் டிரம்ப் தனது நிறுவனத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட தடை விதிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். 


தந்தையுடன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் அதிபரின் மகன்களான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோர் தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய்) அபராதம் செலுத்துமாறு தீர்ப்பளித்த நீதிபதி, அவர்கள் இருவரும் நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் பணியாற்ற  இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.


புனையப்பட்ட குற்றச்சாட்டுகளா?


தங்கள் மீதான குற்றசாட்டை முழுதாக மறுத்த டொனால்ட் டிரம்ப், மேல்முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்குக் பொயாக புனையபப்ட்ட வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன்னை பழிவாங்குவதாகவும் முன்னால் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | இந்துகளுக்கு எதிரான கட்சியே பாஜக தான்... ஏன் தெரியுமா? - கனிமொழி சொல்லும் பாயிண்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ