வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தாலும் அதை வட கொரியா ஏற்பதாக தெரியவில்லை. 


மேலும், எங்களிடம் உள்ள எவுகணையை வைத்து ஒரே அடியில் அமெரிக்காவை தகர்ப்போம் என வட கொரியா எச்சரித்துள்ளது.


இதற்கிடையில், இந்த வாரம் மீண்டும் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான அணு ஆயுத சோதனையை நடத்த வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மூன்றாம் உலக போர் தொடங்கும் என சூசகமாக வட கொரியா தெரிவித்துள்ளது.


இதனிடையில், வட கொரியா மற்றும் தென் கொரியாவில் இருக்கும் 230,000 அமெரிக்கர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்க ராணுவத்துக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், இங்கிருந்து அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவதற்காக அவசரகால பயிற்சிகளை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.