ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் இரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்ததால் அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதா அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.


தங்களது ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என்று இரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


வளைகுடா பகுதியில் எண்ணெயை கடத்த முயன்றதாக ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் மற்றும் அதில் இருந்த 12 பணியாளர்களை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று இரான் தெரிவித்தது.


இது குறித்து, நேற்று வெள்ளை மாளிகையில் டிரம்ப் கூறுகையில்; ஹார்மோஸ் ஜலசந்தியில் இன்று நடந்த தாக்குதல் பற்றி அனைவருக்கும் விரிவாக நான் கூறுகிறேன். அமெரிக்க கப்பலின் பாதுகாப்பையும் அச்சறுத்தல் விளைவிப்பதுபோல் கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் அந்த ஆளில்லா விமானம் பறந்தது. இது கப்பலின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக உள்ளது என பலமுறை எடுத்துக்கூறியும் அந்த ஆளில்லா விமானம் விலகி செல்லவில்லை. 
இதனால், தற்காப்பு நடவடிக்கைக்காக அந்த ட்ரோன் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது'' என்று அவர் கூறினார்.


கடந்த ஜூன் மாதத்தில் தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அக்காலகட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் முன்னதாக செய்திகள் வெளிவந்தன.