வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ட்விட்டரின் பெரும் ரசிகராக இருந்த ஒரு காலம் இருந்தது. அவரை டிவிட்டரில் ஏராளமானோர் பின்பற்றினர். இருப்பினும், அவர் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கூறி ட்விட்டரில் அவருக்கு நிரந்திர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிலும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்ப் ரசிகர்கள், தற்போது இப்போது ஒரு புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்விட்டருக்கு போட்டியாக கெட்டர்


ட்ரம்பின் சமூக ஊடகங்களின் மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு, அவரது குழு ஒரு புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர், பேச்சு சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு, ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளமான GETTR என்னும் புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இருப்பினும், முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த தளத்தில் இன்னும் தனது கணக்கை தொடக்கவில்லை.


GETTR செயலியை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை ப்ரவுஸர் மூலமாகவும் அணுகலாம். ஆப் ஸ்டோரில் இந்த செயலி 'M' என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் கணக்கை தொடக்கலாம். இந்த செயலி ட்விட்டருக்கு (Twitter) மிகவும் ஒத்ததாக இருக்கிறது. இது மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.


ALSO READ |   Twitter India இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி ராஜினாமா; அடுத்தது என்ன 


GETTER ஐ அறிமுகப்படுத்திய மில்லர், முன்னாள் அதிபர் டிரம்ப் தற்போது எங்கள் சமூக வலைதளத்தில் இல்லை என்றாலும், அவருடைய GETTR கணக்கை 'realDonaldTrump' என்னும் பெயரில் தொடக்கியுள்ளேன்.  எங்கள் சமூக ஊடக தளத்தில், கணக்கை தொடக்குமாறு, நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.



GETTR  ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது


இந்த செயலி Android மற்றும் iOS ஆப் ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முதல் 10 தரவரிசையில் காணப்பட்டது. இந்த செயலி இப்போது அதன் போட்டி தளமான ட்விட்டரை போல பிரபலமாக இல்லை. இதற்கிடையில், GETTR இன் உள்ளடக்கம் இனவெறி, பாலியல் வன்முறை மற்றும் ஓரினச்சேர்க்கை போன்ற பல விஷயங்களை ஊக்குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


ALSO READ |DigiLocker: DL, PAN, ஆதார், பாஸ்போர்ட், போன்றவை தொலையும் என்ற கவலை இல்லை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR