அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதியில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.


இந்த பயணத்தில் புது டெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளுக்கு  இவர்கள் இருவரும் செல்கின்றனர். நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்ற வகையில் இவர்களது பயணத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.


இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற டிரம்ப் விருந்து வழங்கினார்.