இரத்தக் கறை படிந்த மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு!!
துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்..!
துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்..!
சிரியாவின் வடக்கு எல்லையில் வசிக்கும் குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையிலான குழு, துருக்கி புறப்பட்டது. அந்தக் குழு நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து குர்துக்கள் மீதான தாக்குதலை துருக்கி நிறுத்தியது.
சிரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினும், துருக்கி அதிபர் எர்டோகனும் இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு வளையத்தில் இருந்து மொத்த குர்து படைகளையும் வெளியேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என தகவல்கள் வெளியாகின. மேலும், அமெரிக்கா குர்து போராளிகளை காட்டிக்கொடுத்து, துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், “குர்துகளுக்கு துரோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு உண்மையில்லை. அமெரிக்க படைகள், குர்து போராளிகளுடன் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடியது. சிரியா விவகாரத்தில் ரஷ்யாவும் துருக்கியும் ஒன்றிணைந்துள்ளன.
ரத்தக் கறை படிந்த அந்த நிலத்தில் வேறு யாராவது போர் நிகழ்த்தட்டும். அமெரிக்கா சிரியா விவகாரத்தில் இருந்து முற்றிலும் விலக முடிவு செய்துள்ளது. துருக்கி மீதான பொருளாதார தடைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.