பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய டொனல்ட் ட்ரம்ப்
உத்தரப் பிரதேசத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் சீன் ஸ்பைசர் கூறியதாவது:- உத்தரப் பிரதேசத்தில் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். மேலும் ட்ரம்ப் - மோடி இடையிலான உரையாடல் பின்னால் விவரமாக வெளியிடப்படும்" என்றார்.
ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு மோடியுடன் தொலைபேசி வாயிலாக நடத்தும் மூன்றாவது உரையாடல் இதுவாகும்.