ஏடன்: ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஆதரவுப் படைகள் மீது புரட்சியாளர்கள் நிகழ்த்திய ஏவுகணை மற்றும் தற்கொலைப் படை தாக்குதலில் 40 பேர் பலியாகி உள்ளதாக, அந்நாடு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனில்(Aden) இன்று (வியாழக்கிழமை) தனித்தனியான இரண்டுவிதமான தாக்குதல்களால் குறைந்தது 40 பேரைக் கொள்ளப்பட்டதாககவும், இந்த தாக்குதல் ஈரானிய ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால், மற்றொன்று ஜிஹாதிகளால் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.


முதல் தாக்குதல் ஒரு காவல் நிலையத்தின் மீது தற்கொலை கார் குண்டுவெடிப்பை ஜிஹாதிகள் நிகழ்த்தினார்கள். இதில் மூன்று அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் உட்பட குறைந்தது 20 பேர் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.


இரண்டாவது தாக்குதலை ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டனர், அவர்கள் ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி ஏடனுக்கு மேற்கே உள்ள பிரெய்க்கா பிரெய்க்கா நகரில் போலீஸ் முகாமில் நடைபெற்ற அரசு ஆதரவுப் படைகளின் அணிவகுப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் குறைந்தது 30 பேரைக் கொன்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகமானோர் காயமடைந்தனர் என மருத்துவ வட்டாரங்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.