குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலைமை புரிந்துகொள்ள ஏதுவாக வண்ணமய ரோந்து வாகனங்களை துபாய் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல வண்ணங்களில் வரையப்பட்ட ஓவியங்களை கொண்ட ரோந்து வாகனங்களை துபாய் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. குற்றவியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலைமையினை அறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


துபாய் காவல்துறையின் மனித உரிமைகள் பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் காவல்துறை அதிகாரியின் சீட்டும், குழந்தைகளின் சீட்டும் எதிரே இருக்கும் படி அமைந்திருக்கும்.


குழந்தைகளுடன் உலவியல் ரீதியாக தொடர்புகொள்ள இந்த வாகனங்கள் ஏதுவாக இருக்கும் எனவும் இந்த மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது. 


மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குறைகளை தீர்க்கவும், மாணவர்களின் பிரச்சணைகளை கண்டறிந்து தீர்க்கவும் இந்த வாகனங்கள் பயன்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.