செயற்கை நுண்ணறிவு சந்தையில் 1.4 கோடி வேலைகளை காலி செய்து விடும்: WEF
கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகின் முக்கிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கூகுள், மெட்டா மற்றும் ட்விட்டர் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் பல காரணங்களுக்காக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. சந்தையில் நிச்சயமற்ற நிலை இன்னும் தொடர்கிறது. இதற்கு மத்தியில், உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கை ஒன்று பீதியை கிளப்பியுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் தரவுத்தொகுப்புடன் தொடர்புடைய 673 மில்லியன் வேலைகளில் 83 மில்லியன் வேலைகளுக்கான தேவை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று WEF அறிக்கை கூறியது. எனினும், 69 மில்லியன் புதிய வேலைகளை உருவாக்கும் என முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.
WEF வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய வேலைவாய்ப்பில் 2 சதவீதத்திற்கு சமமான 14 மில்லியன் வேலைகளை இழக்க நேரிடும். பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதும், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதும் இதற்குக் காரணம் என வேலைகளின் எதிர்காலம் என்ற புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆபத்தில் உள்ள ‘சில’ வேலைகள்
வங்கியில் பணம் கொடுப்பவர்கள், காசாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி கிளார்க்குகள் போன்ற எழுத்தர் அல்லது செயலர் பதவிகளில் உள்ள வேலைகளின் தேவை வேகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவற்றால் குறைந்து வரும் வேலை வாய்ப்புகளும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க | சாட்ஜிபிடி ராஜ்ஜியத்தில் ரகசியமெல்லாம் கிடையாது..! அம்பலமாகப்போகும் உலகம்..!
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
எனினும், இதற்கு நேர்மாறாக, தரவு ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், பெரிய தரவு வல்லுநர்கள், AI இயந்திர கற்றல் வல்லுநர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு வல்லுநர்களின் வேலைவாய்ப்பு சராசரியாக 2027 க்குள் 30 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வேலைச் சந்தை
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்திய வேலைச் சந்தை 22 சதவிகிதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில், வேலைச் சந்தையின் வீழ்ச்சி 23 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. "கிட்டத்தட்ட 23 சதவிகித வேலைகளில் மாற்றம் இருக்கும் என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் வேலை வாயப்பு 10.2 சதவிகித வளர்ச்சி அடையும் என்றும், உலகாளவில் 12.3 சதவிகிதம் வேலை வாய்ப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று WEF தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அவசரம் காட்டப்படும் நிலையில், இது நேர்மறை மற்றும் எதிர்மறை சக்தியாக செயல்படும். AI கருவிகளை செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்கள் தேவை. ChatGPT மற்றும் Bard போன்ற சமீபத்திய AI சாட்பாட் கருவிகள் இருந்தபோதிலும், இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் ஆட்டோமேஷன் மெதுவாக விரிவடைந்தது.
மேலும் படிக்க | Chatgpt: GPT4-ல் இருக்கும் வியத்தகு அம்சங்கள்: யூடியூபர்களுக்கு ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ