Earthquake: நேபாளத்தில் போகாராவின் கிழக்கே 5.3 அளவிலான நிலநடுக்கம்
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகாராவிலிருந்து கிழக்கே 35 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலையில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகாராவிலிருந்து கிழக்கே 35 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ் (USGS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தின் அருகில் வசித்தவர்களுக்கு பூகம்பத்தின் தாக்கம் அதிகம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
காத்மாண்டுவிலிருந்து 113 கி.மீ வடமேற்கில் நேபாள நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. "10 நிமிடங்களுக்கு முன்பு காத்மாண்டுவில் (Nepal) 113 NW ஐ பூகம்பம் (earthquake) தாக்கியது" என்று EMSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. பூகம்பத்தால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
“லாம்ஜங் மாவட்டத்தின் புல்பூலே (Bhulbhule of Lamjung District) என்ற இடத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது, அங்கு இது 5:42 NPT இல் நிகழ்ந்தது. 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது” என்று தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (National Earthquake Monitoring & Research Centre) தலைமை நில அதிர்வு நிபுணர் டாக்டர் லோக் பிஜய் ஆதிகாரி செய்தி நிறுவனமான ANI இடம் கூறினார்.
Also Read | DMDK: நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR