இந்தோனேஷியாவில் இன்று காலை நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் (Indonesia) ஜாவா தீவின் கரையோரத்தில் இன்று அதிகாலை 6.6 ரிக்டர் (6.6 magnitude) அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் (Indonesia) ஜாவா தீவின் கரையோரத்தில் இன்று அதிகாலை 6.6 ரிக்டர் (6.6 magnitude) அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
500 கிலோமீட்டரை விட அதிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது எனக் கூறிய USGS, "இறப்பு மற்றும் சேதம் ஏற்பட்டதற்கான குறைந்த சாத்தியக்கூறுகளே உள்ளன" என்று தெரிவித்தது.
திங்களன்று, ரிக்டர் அளவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தஜிகிஸ்தானின் துஷான்பேக்கு தென்கிழக்கில் 304 கி.மீ தொலைவில் இரவு 8:57-க்கு ஏற்பட்டது (Strikes) என நிலஅதிர்வுகளுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: கார்கிலில் நிலநடுக்கம்!! அதிகாலை 4.7 ரிக்டர் அளவில் நில அதிர்வு!!
இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டம், டெக்டோனிக் தகடுகள் மோதுகின்ற நெருப்பு வளையம் எனப்படும் "ரிங் ஆஃப் ஃபயர்" காரணமாக அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாட்டை எதிர்கொள்கிறது.
முன்னதாக 2018 ஆம் ஆண்டில், சுலவேசி தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டு அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 4,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு தென்மேற்கே 30 கி.மீ தூரத்தில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் திங்களன்று 21:36:26 IST நேரத்தில் ஏற்பட்டது.
உலகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவதியுல் உள்ள இந்த வேளையில், உலகம் முழுவதும் நில அதிர்வுகளின் எண்ணிக்கையும் சமீப காலங்களாக அதிகரித்து உவருவது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.