பூமியின் ரகசியங்கள்: பூமி தொடர்பான பல ரகசியங்களை விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வெளிக்கொணருகிறார்கள். தொடர்ந்து பூமியை தேடும் பணியில், பூமியின் மையம் ஒரு நாள் சுழல்வது நின்றுவிடும் என்றும் சிறிது நேரத்தில் பூமி எதிர்திசையில் சுழலத் தொடங்கும் என்பதும் வெகு காலத்திற்கு முன்பே கூறப்பட்டு வருகிறது. பூமியின் மையம் நின்றால் என்ன நடக்கும்? அழிவை ஏற்படுத்துமா? பூமியின் உள் மையம் நின்றவுடன் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்படுமா? பூமி தொடர்பான இந்த சம்பவம் மற்றும் அதன் விளைவு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பூமியின் உள் மையமானது சுழன்று கொண்டே இருக்கிறது என்பதை அறிவது அவசியம். சூடான மற்றும் திடமான இரும்பின் உள் கோளத்தின் சுழற்சியின் காரணமாக, பூமியில் காந்தப்புலம் மற்றும் ஈர்ப்பு உள்ளது. இந்த மையம் ஒரே திசையில் சுற்றுவதால், பூமியில் ஈர்ப்பு உள்ளது. இப்போது பூமியின் மையம் சுற்றுவதை நிறுத்தும் நிகழ்வைப் பற்றி பேசலாம்.


மேலும் படிக்க | Aliens: வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா..!!


பூமியின் மையப்பகுதியின் சுழற்சி திசையில் மாற்றம் ஏற்படப் போவதாக விஞ்ஞானிகள் மற்றும் நில அதிர்வு நிபுணர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இது நடக்கும் முன், உள் மையம் சிறிது நேரம் சுழலும். நேச்சர் ஜியோசைன்ஸில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பூமியின் மையத்தின் சுழற்சி காரணமாக, மேல் மேற்பரப்பு நிலைத்தன்மையைப் பெறுகிறது. ஒவ்வொரு 70 வருடங்களுக்கும் மையத்தின் சுழற்சியின் திசை மாறுகிறது. இந்த மாற்றம் சுமார் 17 ஆண்டுகளுக்குள் நிகழும் மற்றும் பூமியின் மையம் எதிர் திசையில் சுழல ஆரம்பிக்கும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


 



 


மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்


இப்போது அதன் விளைவைப் பற்றி பேசலாம். பூமியின் மையத்தின் சுழற்சியின் திசையில் ஏற்படும் மாற்றத்தால், பூமி வெடிக்காது அல்லது எந்த ஒரு பேரழிவும் வராது. இச்சம்பவத்தால் பூமிக்கோ, இப்பூவுலகில் வாழும் உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது 1936 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது டச்சு நில அதிர்வு நிபுணர் இங்கே லெஹ்மன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR