சூயஸ் கால்வாயில் ட்ராபிக் ஜாம் ஏற்படுத்திய Ever Given கப்பலுக்கு நீடிக்கும் சிக்கல்
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் எற்பட்ட ட்ராபிக் ஜாம் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நின்றதால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயல் காலவாயில் (Suez Canal), கால்வாயில் சென்ற மாத இறுதியில், எவர் கிவன் (Ever given) என்னும் பிரம்மாண்டமான சரக்கு கப்பல், குறுக்கே தரைதட்டி நிற்றதால், கடலில் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டு உலக வர்த்தகம் ஸ்தபித்தது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் எவர் கிவன் (Ever given) சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக ஆறு நாட்களாக நகராமல் இருந்த கப்பல் நகரத் தொடங்கி, போக்குவரத்து மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த கப்பலின் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் உள்ளது. எகிப்து அதிகாரிகள் அதைச் சிறை பிடித்து வித்துள்ளனர். தற்போது ‘கிரேட் பிட்டர் லேக்’ என்ற அகலமான ஏரிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘எவர் கிவன்’ கப்பலை விடுவிக்க வேண்டும் என்றால், ஒரு பில்லியன் டாலர், அதாவது ₹7505 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என எகிப்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ALSO READ | In Pics: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பல்
சரக்கு கப்பல் ட்ராபிக் ஜாமை ஏற்படுத்திய சமப்வம் குறித்து தீவிர விசாரணையை செய்து முடித்து, இழப்பீடும் கைக்கு வந்தால் தான் கப்பலை விடுவிக்க முடியும் என எகிப்து அதிகாரிகள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal) எற்பட்ட ட்ராபிக் ஜாம் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நின்றதால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சூயஸ் கால்வாயில், கப்பல் போக்குவரத்து தடைபட்டால், ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் ஆகும்.
எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal) தினமும் 900 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது.
ALSO READ | சூயஸ் கால்வாய் ட்ராபிக் ஜாம் எப்போது அகலும்; அதிகாரிகள் கூறுவது என்ன
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR