பிரான்ஸ் உள்ள பாரீஸ் நகரில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற எகிப்து விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது.  இந்த விமானத்தில் மொத்தம் 66 பேர் பயணம் செய்தனர். அதில் பயணம் அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என்றும், யாருதாவது உயிருடன் இருக்கிறர்களா? இல்லையா? என்பதை பற்றி உறுதியான தகவல்கள் இப்போதைக்கு தரமுடியாது என எகிப்து தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிஇருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விமானத்தின் சிதைவு பாகங்கள் "கார்பாதோஸ் தீவு" பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று எகிப்து தகவல் தெரிவித்துள்ளது. விமானத்தின் சிதைவு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. எகிப்திய விசாரணை குழு கிரேக்க விசாரணை குழுவுடன் இணைந்து தேடும் பணியில் செயல்பட்டு வருகிறது. 


விமானம் விபத்துக்குள் சிக்கியதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது தீவிரவாத தாக்குதலுக்கு காரணமா என்பது விசாரணைக்கு பின்புதான் தெரியும் என்று எகிப்த்தின் விமான போக்குவரத்து மந்திரி கூறினார்.


விமானத்தில் பயணம் செய்தவர்கள் 30 பேர் எகிப்து நாட்டை சார்ந்தவர்கள், 15 பேர் பிரான்ஸ் நாட்டை சார்ந்தவர்கள், இங்கிலாந்து, பெல்ஜியம், ஈராக், குவைத், சவூதி அரேபியா, போர்ச்சுக்கல், அல்ஜீரியா, கனடா ஆகிய நாட்டை சார்ந்தவர்கள் தலா ஒருவர் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் ஒரு குழந்தையும் மற்றும் 2 கைக்குழந்தைகளும் பயணித்தது தெரியவந்துள்ளது.