நியூயார்க்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் செய்த பாலியல் கடத்தல் செயல்களுக்கு, ஜேபி மோர்கன் சேஸைப் பொறுப்பேற்கக் கோரிய தனது வழக்கின் ஆவணங்களுக்காக பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க விர்ஜின் தீவு நீதிமன்றம் சம்மன் அனுப்புகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஃபெடரல் சிறையில் பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக 2019 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக் கொண்ட எப்ஸ்டீன் தொடர்பான எந்தவொரு தவறான செயலுக்கும் எலோன் மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் பல ஆண்டுகளாக, எப்ஸ்டீன் சில வணிக விஷயங்களில் மஸ்க்கிற்கு ஆலோசனை வழங்கியதாக, உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் மொபைலில் உள்ள இந்த 11 ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்!


சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக எலோன் மஸ்க்கின் செய்தித் தொடர்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர், ஆனால் அமெரிக்காவின் விர்ஜின் தீவுகளின் அரசாங்கம், எப்ஸ்டீன் ஒரு சாத்தியமான வாடிக்கையாளராக மஸ்க்கைக் குறிப்பிட்டிருக்கலாம் அல்லது குறிப்பிட முயற்சித்திருக்கலாம் என்று நம்புவதாக நீதிமன்ற ஆவணம் ஒன்று கூறுகிறது.  



கடந்த ஆண்டு ஜேபி மோர்கன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது, அதன் விசாரணையில் நிதிச் சேவை நிறுவனமான எப்ஸ்டீம் ஆட்சேர்ப்பு செய்தவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் செலுத்த உதவியது மற்றும் "எப்ஸ்டீன் கடத்தல் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் மறைப்புக்கு இன்றியமையாதது" என்று கூறியது.


ஆனால் எப்ஸ்டீனின் நடவடிக்கைகளுக்கு நிதி நிறுவனத்தை குற்றம் சாட்ட முயற்சிக்கும் வழக்குகள் சட்டப்பூர்வமாக தகுதியற்றவை, தவறான கட்சியை நோக்கியவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று ஜேபி மோர்கனின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | உளவு பார்க்கும் WhatsApp... அதை நம்பாதீங்க.. பகீர் கிளப்பும் எலான் மஸ்க்!


2000 களின் முற்பகுதியில் எப்ஸ்டீன் நியூயார்க் மற்றும் புளோரிடாவின் பாம் பீச் ஆகிய இடங்களில் உள்ள தனது மாளிகைகளில் டஜன் கணக்கான வயதுக்குட்பட்ட சிறுமிகளை வேலைக்கு அமர்த்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அவர் குற்றமற்றவர்.குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


எலோன் மஸ்க் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் அவருக்கு சம்மன் வழங்க முடியவில்லை என்றும், எனவே, அவருக்குப் பதிலாக அவரது மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்று, விர்ஜின் தீவுகளின் அரசு வழக்கறிஞர்கள், திங்களன்று பெடரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். 


மேலும் படிக்க | வாட்ஸ்அப் வழியாக அரங்கேறும் புதுவகை மோசடி; தப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ