விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டாரா எலான் மஸ்க்? அதிர்ச்சி ரிப்போர்ட்
விமானப் பணிப்பெண் வேலை கிடைத்த பிறகு, மஸ்குக்கு மசாஜ் அளிக்க ஏதுவாக, மஸாஜ் அளிக்கும் பணிக்கான உரிமம் பெற தான் ஊக்கப்படுத்தப்பட்டதாக அந்த பெண் நண்பரிடம் கூறினார்.
ட்விட்டரை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், எலான் மஸ்க் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெள்ளியன்று அவரது விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு $250,000 கொடுத்ததாக ஒரு ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல் இருக்க, அப்பெண்ணுக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விமானத்தில் குழு உறுப்பினராக பணிபுரிகிறார். மஸ்க் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும், சிற்றின்ப மசாஜ் செய்யுமாறு கூறியதாகவும் அப்பெண் தெரிவித்ததாக பிசினஸ் இன்சைடரில் கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் விமானப் பணிப்பெண், மஸ்க் மசாஜ் செய்யும் போது "மேலும் சிலவற்றையும்" மஸ்க் செய்யச் சொன்னார் என கூறியுள்ளார்.
"மஸ்க் தனது சம்மதம் இல்லாமல் தனது காலை வருடியதாகவும், சிற்றின்ப மசாஜ் செய்வதற்கு ஈடாக ஒரு குதிரையை வாங்கித் தர முன்வந்ததாகவும்” அவர் மஸ்க் மீது குற்றம் சாட்டினார் என்று பேட்டிகள் மற்றும் ஆவணங்களை மேற்கோள் காட்டி அறிக்கை கூறியது. மசாஜ் செய்யும் போது, மஸ்க் தனது பிறப்புறுப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் 2016 இல் நடந்துள்ளது. இது தொடர்பாக, தனது நண்பர் ஒருவர் கையெழுத்திட்ட ஒரு பிகரகடனத்தை அப்பெண் தயாரித்துள்ளார்.
மேலும் படிக்க | எலான் மஸ்க் "மனநலம் குன்றியவர்"....ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்!
இந்த பிரகடனத்தின்படி, விமானப் பணிப்பெண் வேலை கிடைத்த பிறகு, மஸ்குக்கு மசாஜ் அளிக்க ஏதுவாக, மஸாஜ் அளிக்கும் பணிக்கான உரிமம் பெற தான் ஊக்கப்படுத்தப்பட்டதாக அந்த பெண் நண்பரிடம் கூறினார்.
"மஸ்கின் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650இஆர்-ல் உள்ள ஒரு தனியார் கேபினில் இதுபோன்ற ஒரு மசாஜ் செய்யும் போது, மஸ்க் அப்பெண்ணுடன் இப்படி நடந்துகொண்டார்” என்று அறிக்கை கூறுகிறது.
இது குறித்து பதிலளித்த மஸ்க், "இந்தக் கதையில் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன” என்று கூறி, பதிலளிக்க இன்னும் நேரம் தேவை என்று கூறினார்.
"பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட நான் முனைந்திருந்தால், எனது முழு 30 வருட வாழ்க்கையில் இதுவே முதல்முறையாக இருக்க வாய்ப்பில்லை" என்று மஸ்க் ஒரு மின்னஞ்சலில் கூறினார். இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கலந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
‘அந்த பெண் "விற்பனைக்கு இல்லை", அவர் பணம் அல்லது பரிசுக்காக பாலியல் ரீதியாக துணை போக தயாராக இல்லை’ என்று பெண்ணின் நண்பர் அளித்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. மஸ்க் ஒரு முறை லண்டன் சென்றுகொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
"விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அவர் எண்ணினார். இவை அனைத்தையும் மறந்துவிட்டு இயல்பாக இருக்கலாம் என அவர் யோசித்தார். இருப்பினும், அவருக்கு சில மாற்றங்கள் தெரியத் தொடங்கின. அவரது பணிகள் குறைக்கப்பட்டன. அவர் மன அழுத்தத்துக்கு ஆளானார்” என்று பாதிக்கப்பட்டவரின் நண்பர் இன்சைடரிடம் கூறினார்.
இறுதியில், அந்த பெண் "தான் பாலியல் ரீதியாக விட்டுக்கொடுக்க மறுத்ததால் தண்டிக்கப்படுவதை" உணர்ந்ததாக அறிவிப்பு கூறுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் மசாஜ்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன் விமானங்களில் பயணிக்கும் நிர்வாகிகளுக்காக மசாஜ் நிபுணர்களையும் நிறுவனம் நியமித்துள்ளது.
மஸ்க் தற்போது ட்விட்டரைப் பெறுவதற்கான கடுமையான போரில் ஈடுபட்டுள்ளார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் உண்மையான எண்ணிக்கையை அவர் அறியாத வரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் ரிபப்ளிகன் கட்சியினரை தற்போது ஆதரிப்பதால், வரும் நாட்களில் தன் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகரிக்கும் என்று வியாழனன்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
மேலும் படிக்க | இந்திய சந்தையில் நுழையும் திட்டத்தை கைவிட்ட டெஸ்லா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR