வொர்க் ப்ரம் ஹோம் இனி கிடையாது... அதிரடி காட்டும் எலான் மஸ்க்!
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலோன் மஸ்க், தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலோன் மஸ்க், தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் எலான் மஸ்க், ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில், தனது பணியாளர்களுக்கு முதன்முறையாக அனுப்பிய மின்னஞ்சலில், "எதிர்வரும் கடினமான காலங்களுக்கு" அவர்களை தயார்படுத்தவும், அவர் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளிக்காத வரை தொலைதூர பகுதியில் இருந்து வேலை செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். புதிய விதிகள், உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் மேலும் கூறினார்.
மேலும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணத்தையும் அறிவித்துள்ளார். மஸ்க்கின் வருகைக்கு முன்னர், ட்விட்டர் தனது பணியாளர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் அல்லது ரொமோட் வொர்க் ஆப்ஷன்களை வழங்கியிருந்தது. பெரும்பாலானோர், தொற்று நோய் பரவல் தொடங்கியதில் இருந்து, தொலைதூரத்தில் இருந்து அல்லது வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், அப்போது அவர், தான் வொர்க் ப்ரம் ஹோம் கலாசாரத்திற்கு எதிரானவர் என்றும், மிக அவசியம் என கருதினால் மட்டுமே அதற்கான அனுமதியை வழங்குவேன் என்றும் உறுதிபடக் கூறினார்.
"முன்னோக்கி செல்லும் பாதை கடினமானது மற்றும் வெற்றிபெற தீவிர உழைப்பு தேவைப்படும்" என்று மஸ்க் தனது ஊழியர்களுக்கு எழுதினார். ஒரு தனி மின்னஞ்சலில், "அடுத்த சில நாட்களில், சரிபார்க்கப்பட்ட போட்கள்/ட்ரோல்கள்/ஸ்பேமைக் கண்டறிந்து இடைநிறுத்துவதே முன்னுரிமை பணி" என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, எலான் மஸ்க், டிவிட்டர் கணக்கில் ப்ளூ டிக்களைப் பெறுவதற்கு, மாதத்திற்கு $ 8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது. புளூ டிக் வைத்திருக்கும் மக்கள், பிற கணக்குகளை வைத்திருப்பவர்களை விட நம்பகத் தன்மை அதிகம் உள்ளவர்கள் என்பதை உணர்த்துகிறது.
மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ