டெஸ்லா பங்குகளை விற்ற எலன் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தில் தனக்கு உள்ள 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.
பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு கடந்த திங்களன்று வாங்கினார். ட்விட்டரை வாங்குவதற்கான நிதியை திரட்ட எலன் மஸ்க் டெஸ்லாவில் தனக்குள்ள பங்குகளை விற்கக்கூடும் என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
தற்போது டெஸ்டா நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளில் 400 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். டெஸ்டாவில் 17% பங்குகளை வைத்துள்ள எலான் மஸ்க் அவற்றில் 2.6% பங்குகளை விற்பனை செய்துள்ளார். இதற்குமேல் டெஸ்லாவின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | ட்விட்டரால் திசை மாறிய எலான் மஸ்க்..ஒரே நாளில் சரிந்த டெஸ்லா பங்குகள்
மீதமுள்ள நிதிக்கு எலான் மஸ்க் என்ன செய்யவுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இதற்காக அவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பார் என கூறப்படுகிறது. ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் 43.61% பங்குகளை எலான் மஸ்க் வைத்துள்ளார். இதன் மதிப்பு 100 பில்லியன் அதாவது 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். நவம்பர், டிசம்பரில் டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பது குறித்து ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்திய பிறகு, முதன்முறையாக எலான் மஸ்க் தனது பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
மேலும், ட்விட்டரை வாங்குவதற்கான நிதியைப் பெற மஸ்க் பங்குதாரரை இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் அளவுக்கு எலான் மஸ்கிற்கு புதிய பங்குதாரர் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. போதிய நிதி இல்லை எனில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவது குறித்து எலான் மஸ்க் சிந்திக்க வேண்டும் எனவும் வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | எலான் மஸ்க் ட்விட்டருக்கு மிக பொருத்தமான நபர்: ஜாக் டார்ஸி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR