ட்விட்டரை வாங்கும் முடிவைக் கைவிடுகிறாரா எலான் மஸ்க்?
Twitter deal in trouble: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட வேண்டுமென எலான் மஸ்க்கின் குழுவினர் அவரிடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கினார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். இந்த நிலையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் ஒப்பந்தம் குறித்த எலான் மஸ்க்கின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியாத நிலையில், அவர் ஒப்பந்தத்தைக் கைவிடுவது குறித்து சிந்தித்து வருவதாக பிரபல அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ட்விட்டர் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
மேலும் படிக்க | Elon Musk: 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்
எலான் மஸ்க் வாங்கிய விலையை விட அந்நிறுவனப் பங்குகள் 4% சரிவைச் சந்தித்துள்ளன. வரவிருக்கும் வாரங்களில் ட்விட்டர் ஒப்பந்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் நிர்வாகிகள் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான கணக்குகள் போலியானவை என உறுதியாகக் கூறியுள்ளனர். ஆனால் எலான் மஸ்க் போலிக்கணக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என நம்புவதாகக் கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்தியபடி மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் கணித்துள்ளனர். எலான் மஸ்க் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தில் இருந்து 60% விலைக்கே ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளதாகவும் அல்லது ஒரு பில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி விட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | டெஸ்லா அதிகாரியுடன் ரகசிய உறவு... 9 வது முறையாக தந்தை ஆனார் எலன் மஸ்க்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR