அமெரிக்க விண்வெளி வீரரும், நிலாவில் கடையாக கால்பதித்தவருமான யூஜின் செர்னன் தனது 82 வயதில் காலமாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அனுப்பிய அப்பல்லோ 17 விண்கலத்தில் 1972-ம் ஆண்டும் நிலவுக்கு பயணம் மேற்கொண்டவர் யூஜின் செர்னன்.


அந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி நிலவில் கால் பதித்தார். அங்கு அவரின் ஒரே குழந்தையின் முதல் எழுத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.


82 வயதான யூஜின் கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 


2007-ம் ஆண்டு தான் நிலவில் கால் வைத்த தருணத்தை பற்றி சிலிர்த்து பேசினார். முதல் இரு முறை நிலவுக்கு சென்றும் அதில் கால்வைக்க முடியவில்லை. மூன்றாவது முறையாக சென்ற போது தான் நிலவில் கால் பதிக்க முடிந்தது.


இதுவரை நிலாவில் கால் பதித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ள 11 பேரில் யூஜினும் ஒருவர். அதுமட்டுமில்லாமல் நிலாவில் கடைசியாக கால் பதித்த நபரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.