ஐரோப்பிய யூனியன்: இங்கிலாந்து விலகினாலும் நட்பு தொடரும் -அதிபர் ஒபாமா
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டுமா, வேண்டாமா என்ற கருத்தறியும் பொது வாக்கெடுப்பில், இங்கிலாந்தின் பெரும்பான்மையான மக்கள் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுகிறது. மேலும் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:
இங்கிலாந்து மக்களின் வாக்குகளை மதிக்கிறேன். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு இடையே உள்ள நட்பு நீடித்து இருக்கும். மேலும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் இரண்டும் அமெரிக்காவிற்கு தவிர்க்க முடியதா நண்பர்களாக இருக்கின்றனர். அவர்களுடான நட்பு தொடரும் என்று கூறியுள்ளார்.