பாகிஸ்தான் உள்ள இஸ்லமாபாத் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கி பரிசோதனை மேற்கொண்டது. மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:- பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத் மற்றும் கிழக்குப்பகுதி நகரான லாகூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை நேற்று அதிகாரிகள் மூடினார். வாகனங்கள் அனைத்தும் பழைய மலைப்பகுதி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இரு நாட்களுக்கு போர் விமானங்கள் சாலையில் தரையிறக்கி பரிசோதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.


 



 


 



 


 



 


 



 


காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாமில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறக்கு இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பதட்டமான சூழல் அதிகரித்துள்ள நிலையில், போர் விமானத்தை பாகிஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி பரிசோதித்தது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜாவீத் முகம்மது அலி கூறுகையில்:- இது வழக்கமான பரிசோதனை என்றும் இதனுடன் சமீபத்திய பதட்டமான சூழலை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று  கூறியுள்ளார்.