Fact Check! சீனாவில் ராணுவப் புரட்சியா... அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் கைதில் இருக்கிறாரா.. உண்மை என்ன!
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சிறையில் அடைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் ஒரு தகவல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன ராணுவம் நடத்திய புரட்சியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டு சிறையில் உள்ளதாக ட்விட்டரில் செய்தி பரவி வருகிறது. அதில் சீன ராணுவம் அதிபர் ஜி ஜின்பிங்கை வீட்டில் வைத்து கைது செய்து அவரது அதிகாரத்தை கைப்பற்ற தயாராகி வருகிறது என கூறப்பட்டுள்ளது . சில வருடங்களுக்கு முன்பு மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இதுதான் நடந்தது. ட்விட்டரில் #XiJinping என்ற ஹேஷ்டேக்கில் ஆயிரக்கணக்கான ட்வீட்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், சீனாவின் அதிகாரபூர்வ ஊடகம் இது குறித்து இதுவரை மவுனம் காத்து வருகிறது.
ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சீனாவைச் சேர்ந்த சில சமூக ஊடகப் பயனர்கள் கூறியுள்ளனர். இது தவிர, சீன மக்கள் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) அதிபர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங்கை நீக்கிவிட்டு, ஆட்சியை தன் கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், ஜெனரல் லி கியாமிங்கின் பெயரும் பெரிதும் அடிபடுகிறது. தற்போது சீன அதிபர் லீ கியாமிங் சீனாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தலைமுடியை வெட்டிப் போராடும் பெண்கள் : பற்றி எரியும் ஈரான்
எனினும் தற்போது வரை, அத்தகைய செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. சர்வதேச பத்திரிகையாளர்கள் இது வெறும் வதந்தி என கூறுகின்றனர். சீனாவைப் பற்றிய செய்திகளை வழங்கும் குளோபல் டைம்ஸ், சிஎன்என் அல்லது பிபிசி போன்ற சேனல்களும் இதை உறுதிப்படுத்தவில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை அல்லது சீனாவில் ஆட்சிக்கவிழ்ப்பு எதுவும் நடக்கவில்லை என்பதே இதுவரை உண்மை. சீனாவில் கடந்த சில தினங்களாக, பெரிய அளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஜி ஜின்பிங்கிற்கு கடந்த சில நாட்களாக எதிர்ப்பு கிளம்பி வருவதால், அவரை கைது செய்வது குறித்து பல தகவல்கள் பரவி வருகிறது. எனினும், விமானங்கள் ரத்து தொடர்பான காரணம் தெரியவில்லை. சமீபத்தில், அவரது எதிரியாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நாஸ்ட்ராடாமஸின் பீதியூட்டும் கணிப்புகள்: மூன்றாம் உலகப்போர் மூளுமா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ