கடல் விவசாயத்தில் புரட்சி; இந்திய ஸ்டாட்-அப் நிறுவனத்தின் அற்புத தயாரிப்பு!
கடற்பாசி ( seaweed ) புரதம் நிறைந்த உணவுப் பொருள் என்பதோடு, அதனை மருந்து பொருளாகவும் பயன்படுத்தலாம். மேலும், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், உயிரி எரிபொருள்கள் மற்றும் மக்கும் பொருட்களிலும் பயன்படுத்தலாம்.
வாஷிங்டன்: கடல் பாசி மனிதனின் வருங்காலத்திற்கான உணவு மற்றும் எரிபொருள் தேவைக்கான முக்கிய மாற்றாக இருக்கும் என கருதப்பட்டு வரும் நிலையில், கடல் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம். ஸ்டார்ட்அப் ஒரு மாபெரும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கடல் விவசாயத்தில் விளையும் கடற்பாசி பயிர்களை எளிதாக அறுவடை செய்யலாம்.
கடற்பாசி ( seaweed ) புரதம் நிறைந்த உணவுப் பொருள் என்பதோடு, அதனை மருந்து பொருளாகவும் பயன்படுத்தலாம். மேலும், அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், உயிரி எரிபொருள்கள் மற்றும் மக்கும் பொருட்களிலும் பயன்படுத்தலாம்.
தற்போது, பாசிகள் பொதுவாக கடலில் தொங்கும் கயிறுகள் அல்லது வலைகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால், தற்போதுள்ள தொழில்நுட்பத்தால், பெரிய அளவில் கடலில் உற்பத்தி செய்ய முடியும். கடல் விவசாயத்தில், புதிய நவீன முறைகள் தற்போது வரை கடைபிடிக்கப்படவில்லை என இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான Sea6 Energy நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீகுமார் சூர்யநாராயணா கூறுகிறார்.
ALSO READ | 'அந்த இரு கண்களும் என்னையே பார்த்தன': தவறுதலாக ‘எலியை’ சாப்பிட்ட நபர்!
இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக இருக்கும். 2010 இல் நிறுவப்பட்ட Sea6 எனர்ஜி, கடல் விவசாயத்தையும் இயந்திரமயமாக்க விரும்புகிறது. டிராக்டர்கள் விவசாயத்தை முற்றிலும் மாற்றியது போல், இந்த கடலில் அறுவடை செய்வதற்கான இயந்திரம், கடல் விவசாயத்தை முற்றிலும் மாற்றும் என்று கூறப்படுகிறது.
இயந்திரம் வேலை செய்யும் விதம்
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த இயந்திரம் கடற்பாசி பயிர்களுக்கு இடையில் முன்னும் பின்னுமாக நகர்ந்து, முழுமையாக வளர்ந்த தாவரங்களை அறுவடை செய்து அவற்றை சிறிய விதைகளாக வெட்டுகிறது. இந்த இயந்திரம் இந்தோனேசியாவை தளமாகக் கொண்ட, ஒரு கடல் பாசி வளர்க்கும் முக்கிய நிறுவனத்தினால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடல் பாசி சாகுபடி என்பது அதிக அளவில் செய்யப்படும் தொழிலாகும்.
ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!
இங்கு கிராம மக்கள் கடற்பாசியின் துண்டுகளை கயிற்றால் கட்டி கடலுக்குள் கொண்டு செல்கின்றனர். பின்னர், பயிர் அறுவடை செய்யும் போது, கைகளால் அறுவடை செய்கின்றனர். Sea6 Energy நிறுவனத்தில், இந்த தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடைந்து, சந்தை வளரும் போது, இந்தியா உட்பட பல நாடுகளில் இதுபோன்ற இயந்திரங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என அநிறுவனம் தெரிவிக்கிறது.
கடற்பாசி வணிகம்
உலகளாவிய கடற்பாசி தொழில் 2005 மற்றும் 2015 க்கு இடையில் இரட்டிப்பாகியது. 2018 ஆண்டில், உற்பத்தி 33 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்தது. பின்னர், இதற்கு கடின உழைபு தேவைபடுவதாலும், பயிரிடுதற்கான செலவுகள் அதிகரித்ததாலும் சந்தையில், இதன் வளர்ச்சி தடைபட்டுள்ளது. அதிக விலை காரணமாக, குறைந்த இடங்களில் கடல் பாசி பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த புதிய இயந்திரத்தினால், செலவு குறைவதோடு, வேலையும் எளிதாகி விடும் என்பதால், கடற்பாசிகள் உற்பத்தி அதிகரித்து அதன் விலை மலிவாகிவிடும் என்றும் Sea6 Energy நிறுவனம் கூறுகிறது. உலகில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்க கடல்சார் வேளாண்மை உதவிகரமாக இருக்கும்.
ALSO READ | வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தில் மீது தலையை வைத்து படுத்த நபர் -Viral Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR