ஆஸ்திரேலியாவில் மே 18 பொதுத்தேர்தல்: பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.
பிரதமர் மோரிசனும், எதிர்த்தரப்புத் தலைவர் பில் ஷார்டனும் கடந்த வாரம் தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கினர். ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டு போடாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.