ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பான பகுதியில் 5 ராக்கெட் குண்டுகள் ஏவி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவ படையினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம் நிலவியது. அதைத்தொடர்ந்து, பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில் அவ்வப்போது ராக்கெட் குண்டுவீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.


இந்நிலையில், நேற்றும் அமெரிக்க தூதரகத்தை ஒட்டிய பகுதிகளில் 5 ராக்கெட் குண்டுகள் வீசி தாக்கப்பட்டன. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட வேண்டுமென அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஈராக்கில் தற்போது 5000க்கும் மேற்பட்ட அமெரிக்க படை முகாமிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈராக் நாட்டின் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.