ஃபுளோரன்ஸ் புயலால் தீவு போல காட்சியளிக்கும் நகரங்கள்; 17 பேர் பலி
தென்கிழக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா மற்றும் வில்மிங்டன் உட்பட பகுதிகள் ஃபுளோரன்ஸ் புயலால் பெரும் பாதிப்படைந்துள்ளன. இதுவரை 15 மில்லியனுக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தென்கிழக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா மற்றும் வில்மிங்டன் உட்பட பகுதிகள் ஃபுளோரன்ஸ் புயலால் பெரும் பாதிப்படைந்துள்ளன. இதுவரை 15 மில்லியனுக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை சக்திவாய்ந்த ஃபுளோரன்ஸ் புயல் தாக்குதலுக்கு உள்ளானதால், பெரும் சேதம் ஏற்ப்பட்டு உள்ளது. சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாதா சூழலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தீவு போல காட்சியளிக்கின்றனர்.
வெள்ளம் ஏற்ப்பட்டு பேரழிவு ஏற்ப்பட வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களை காட்டிலும் தற்போது இந்தப் புயல் ஆபத்தானதாக மாறியிருக்கிறது. இதனால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடுமையான வெள்ளத்தால், பல ஆறுகள் நிரப்பி வருகின்றன. ஓரிரு நாட்களில் வெள்ளம் கூட ஏற்ப்படலாம் என வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 900-க்கும் அதிகமாமா மக்கள் வெள்ளத்தில் இருந்து மீட்கபப்ட்டு உள்ளனர். 15,000 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேப் பியர் நதி மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிக்குள் நடுவில் இருக்கும் 117,000 பேர் வசிக்கும் கடற்கரை நகரமான வில்மிங்டன் மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு, தீவு போல காட்சியளிக்கிறது.
வடக்கு மற்றும் தென் கரோலினா மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் சுமார் ஆறு லட்சம் வீடுகளுக்கும், அங்கு உள்ள தொழிற்சாலைகளும் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
வடக்கு மற்றும் தென் கரோலினாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளப் பாதிப்புகள் தொடருமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 17 பேர் உயிர் இழந்துள்ளனர்.