பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியர் டுவெய்ன் ஆன்ஃபிராய் (20) என்பவர். இவர் அமெரிக்காவை சேர்ந்தவராவர். இவர் எராளமான பல புரட்சிகர பாடல்களை பாடியதன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். இவர் பாடியுள்ள ''லுக் அட் மீ'' என்ற பாடல் வைரலானத்தையடுத்து, எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.


இந்நிலையில், இவர் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு சென்றபோது, மர்ம நபர் ஒருவர் இவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டினால், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட டுவெய்ன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.