புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன் வில் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன் வில் நகரில் லேண்டிங் மதுபான விடுதியில் வார விடுமுறையையொட்டி வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது, திடீரென ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதில் படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் மற்றவர்களை நோக்கி சுட்ட நபரும் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விடுதி நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், இரண்டு பேர் அமர்ந்து வீடியோ கேமில் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். விளையாட்டு காட்சிகள் வந்துக் கொண்டிருக்கும் பின்னால் திடீரென 10-க்கும் மேற்பட்ட துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தமும், சிலர் அலறும் சத்தமும் பதிவாகியுள்ளது.



இதனிடையே விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து புளோரிடா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ கேம் போட்டியில் தொடர் தோல்வியின் காரணமாக அந்த நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.