Omicron-ஐத் தொடர்ந்து வருகிறது Florona: இஸ்ரேலில் முதல் நோயாளி கண்டறியப்பட்டார்
கோவிட்-19-க்கான நான்காவது தடுப்பூசி டோஸை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. நான்காவது டோசுக்கு அனுமதி அளித்துள்ள சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகியுள்ளது.
ஜெருசலேம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இஸ்ரேலில் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவின் இரட்டைத் தொற்றான "புளோரோனா" (“Florona”) நோயின் முதல் நோயாளி பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. வியாழனன்று வெளிவந்த அறிக்கையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவிட்-19-க்கான (COVID-19) நான்காவது தடுப்பூசி டோஸை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. நான்காவது டோசுக்கு அனுமதி அளித்துள்ள சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகியுள்ளது.
வியாழனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நாச்மான் ஆஷ், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு முதலில் நான்காவது தடுப்பூசி டோஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ALSO READ | இந்தியாவில் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்ட இருவர் உயிர் இழப்பு: காரணம் தொற்றா?
"நாங்கள் தினசரி அடிப்படையில் தரவைத் தொடர்ந்து கண்காணிப்போம். மேலும் இந்த பரிந்துரையை அதிகமான மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டுமா என்பதையும் ஆராய்வோம்" என்று அவர் கூறியதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இந்த வார தொடக்கத்தில் நான்காவது டோஸை பரிசோதிக்கத் தொடங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் ஏற்கனவே பூஸ்டர் ஷாட் செலுத்தப்பட்ட 150 மருத்துவ ஊழியர்களுக்கு அது வழங்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, ஃபைசரின் தடுப்பூசியை வெளியிட்ட முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். மேலும் கடந்த கோடை காலத்தில் இஸ்ரேல் பூஸ்டர் டோஸ்களை வழங்கத் தொடங்கியது.
இருப்பினும், வைரஸின் டெல்டா மாறுபாட்டால் இங்கு இன்னும் ஏராளமானேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஓமிக்ரான் (Omicron) மாறுபாட்டால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையில் மற்றொரு எழுச்சி இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேலில் கோவிட் எண்ணிக்கை
இஸ்ரேலில் தற்போது சுமார் 22,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 90 க்கும் மேற்பட்டோர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாடு குறைந்தது 8,243 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த வாரம், சிலி, பிப்ரவரியில் நான்காவது டோஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது இங்கே கவனிக்கப்பட வேண்டும்.
வைரஸின் மிகக் கடுமையான அறிகுறிகளைத் தடுக்க வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய ஃபைசரின் பாக்ஸ்லோவிட் என்ற மருந்தைப் பெற்ற முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் IV அல்லது ஊசியைப் பயன்படுத்த வேண்டும். இஸ்ரேலிய ஊடகங்களின்படி, மருந்துகளை ஏற்றிவரும் முதல் கப்பலில் 20,000 டோஸ்கள் உள்ளன. மேலும் ஃபைசர் உற்பத்தியை அதிகப்படுத்தி வருவதால், இன்னும் அதிக டோஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR