ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் மீது ஏறி ஆபத்தான முறையில் பயணித்து தவறுதலாக கீழே விழுந்து உயிர் இழந்த இரண்டு பேரில் ஒருவர் ஆப்கானை சேர்ந்த கால்பந்து வீரர் ஜக்கி அன்பர் என்பது தெரியவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத மாற்றங்கள் நிக்ழந்து கொண்டிருக்கின்றன.  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.   முக்கிய நகரங்களை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த 15-ம் தேதி தலைநகர் காபூலை பிடித்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதையடுத்து, ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்தனர்.


காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் மக்களின் நிலையை விவரிக்கும் ஒரு படம் சமீபத்தில் வைரலானது.  விமானத்தில் இடம் கிடைக்காததால் அதன் மீது தொங்கியபடி சிலர் செல்ல முயற்சித்தனர். பேருந்தில் தொங்கிக்கொண்டு பயணிப்பது போல, பறக்கத் தொடங்கிய விமானத்தில் தொங்கிய மூன்று பேர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள மக்களை பதபதைக்க வைத்துள்ளது.


அப்போது ஏற்பட்ட நெரிசல், அதனை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் விமான சக்கரங்களில் பயணித்து கீழே விழுந்தவர்கள் என நான்கு நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.


ALSO READ தொடங்கியது தாலிபான் கொடூரம்: அச்சத்தின் உச்சியில் ஆப்கான் மக்கள்


19 வயதான சாகி அன்வாரி, ஆப்கானிஸ்தான் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடியவர். விமானங்களின் சக்கரங்கள், இறக்கைகளில் அமர்ந்து ஆபத்தமான முறையில் பயணம் செய்து உயிரிழந்தவர்களில் சாகி அன்வாரியும் ஒருவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான விமானத்தில் சென்றபோது அவர் உயிரிழந்தார். இளம் கால்பந்து வீரரின் மறைவுக்கு சக வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


ஜகி அன்வரியின் உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர் பாபக் தக்வேய் கூறுகையில், “அமெரிக்காவின் C-17A  விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்ற இளைஞர்களில் ஜகி அன்வரியும் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தானின் தேசிய இளைஞர் கால்பந்து அணியின் வீரர்” என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR