பிரபல ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் இன்று கைது செய்யப்படலாம். ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால், அது அமெரிக்க அதிபருக்கு எதிரான முதல் கிரிமினல் வழக்காக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல ஆபாச நடிகை ஒருவருடன் முறையற்ற உறவு கொண்ட குற்றச்சாட்டு விசாரணை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் டிரம்ப் மீது பல நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்த நிலையில், தற்போது விவகாரம் கைது வரை சென்றுள்ளது. புகார்களுடன் வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்பட்டதற்கு பிறகு, ஆபாச படத்தில் நடிக்கும் நடிகைகளின் புகார்களும் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.  


2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு, டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விஷயத்தில் இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. எந்தவொரு அமெரிக்க அதிபருக்கும் எதிரான முதல் குற்ற வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.


தான் கைது செய்யப்படலாம் என்ற ஊகங்கள் வெளியான பிறகு, சனிக்கிழமையன்று இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் டிரம்ப் ஒரு கோரிக்கையை விடுத்தார். அதில், தன்னை கைது செய்வதாகக் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு, தன்னை பின் தொடர்பவர்களை அவர் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | SADDEST CITY: ரத்தமாய் ஓடும் ஆறு! மனிதர்களின் ஆயுளையும் குறைக்கும் விசித்திரமான கிராமம்


அதேபோல், போராட்டங்கள் நடத்த தான் அழைப்பு விடுப்பது, தனது ஆதரவாளர்கள் 2021 ஜனவரி 6ம் தேதியன்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க தலைநகர் மீதான நடத்திய வன்முறைத் தாக்குதல்களாக மாறினால், சட்டம் ஒழுங்க்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அவர் கவலையை சூசகமாக தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு மீண்டும் குடியரசுக் கட்சி வேட்பாளராக,அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப், கைது செய்யப்பட்டால், இதுவரை இல்லாத ஒரு முன்னுதாரணத்தை முன்னாள் அதிபர் டிரம்ப் ஏற்படுத்திவிடுவார். 


 2019 இல் உக்ரைன் தொடர்பான அவரது நடத்தைக்காகவும், 2021 இல் அவரது ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் மீது நடத்திய தாக்குதலுக்காவும், டிரம்ப் இரண்டு முறை செனட்டில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், வரி மோசடி குற்றச்சாட்டில் கடந்த டிசம்பரில் தண்டனை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் ஊழியர்களுக்கு 2 மாஸ் அறிவிப்புகள், தயாராகும் அரசு!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ