130 பெண்களை திருமணம் செய்த முன்னாள் மத போதகர் மரணம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

130 பெண்களை திருமணம் செய்து கொண்ட நைஜீரியாவை சேர்ந்த முன்னாள் மத போதகர் முகமது பெல்லோ தனது 93 வது வயதில் மரணம் அடைந்தார். இவருக்கு 203 குழந்தைகள் உள்ளனர்.


இஸ்லாமிய சட்டத்தை மீறி அவர் பல பெண்களை திருமணம் செய்தால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2008-ம் ஆண்டு அவர் 86 பெண்களை மணந்திருந்த சமயத்தில், 82 மனைவிகளை உடனடியாக விவாகரத்து செய்யும்படி பிற மதபோதர்கள் வலியுறுத்தினர். ஷரியா சட்டத்தில் 4 மனைவிகள் வரை மட்டுமே மணந்து கொள்ள அனுமதி இருப்பதால், பிற மனைவிகளை விவாகரத்து செய்ய ஷரியா கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை விவாகரத்து செய்ய முகமது பெல்லோ மறுத்து விட்டார். தொடர்ந்து திருமணம் செய்த வண்ணம் இருந்தார். தற்போது கூட சில பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள்.