இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜோ பிடனும் அவரது அரசாங்கமும் நம்மை அணு ஆயுதப் போரை நோக்கித் தள்ளிவிடுவதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்திய-அமெரிக்க உறுப்பினர் துளசி கப்பார்ட், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை நாஜி சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார். நவம்பர் 8 இடைக்காலத் தேர்தலுக்கான தனது முதல் வார இறுதி பிரச்சாரத்தின் போது துளசி கப்பார்ட் இந்தக் கருத்தை தெரிவித்தார். சமீபத்தில் மான்செஸ்டருக்கு வெளியே ஒரு நகரத்தில் நடந்த டவுன் ஹால் நிகழ்வில் பேசிய அவர், பிடன் மற்றும் ஹிட்லர் இருவரும் எதேச்சாதிகாரம் குறித்து ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள் என்று தான் நம்புவதாக கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிட்லருக்கும் பிடனுக்கும் ஒரே சிந்தனை!


துளசி கபார்ட் தான் செய்வது தான் சிறந்தது என்று பிடன் நம்புகிறார். ஜெர்மனிக்கு சிறந்ததைச் செய்கிறேன் என்று நினைத்த ஹிட்லர், இல்லையா? அதை போலத் தான் ஜோ பைடன் நினைக்கிறார் என்றார். ஜனநாயக தேசியக் குழுவின் துணைத் தலைவராக இருந்த துளசி கபார்ட், கட்சியை விட்டு விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். ஜனநாயகக் கட்சி மேல்தட்டு மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் போரை தூண்டி விடுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.


எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலை


2020 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியில் அதிபர் வேட்பாளராக போட்டியிட துளசி கப்பார்ட் முயன்றார். ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. ஜனநாயகக் கட்சிக்குள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இந்நிலையில், அதிபர் ஜோ பிடென் குறித்து கூறிய துளசி கப்பார்ட், பிடென் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலை செய்கிறார் என்று கூறியிருந்தார். இதனால் நாட்டில் பிரிவினை அச்சம் அதிகரித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.


ஜனநாயகக் கட்சி மீது குற்றம் சாட்டும் துளசி கப்பார்ட்


ஒவ்வொரு பிரச்சினையிலும் இனவாதத்தைத் தூண்டி, வெள்ளையர்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டி, தனது அரசியல் ஆதாயங்களுக்காக நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இன்று ஜனநாயகக் கட்சி செயற்படுகிறது என்றார்.


மேலும் படிக்க | தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! படித்த கல்லூரிக்கு ₹20 கோடி நன்கொடை


துளசி கப்பார்ட் நடாளுமன்றத்திற்கு செல்லும் முன்பு 2004 மற்றும் 2005 க்கு இடையில் விமானப்படை தேசிய காவலருக்காக ஈராக் போரில் பணியாற்றினார். வெளிநாடுகளில் அமெரிக்கா தலையிடுவதை கபார்ட் நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பிடனின் மோசமான வெளியுறவுக் கொள்கையே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் படிக்க | NRI டாக்டர் விவேக் மூர்த்திக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ