பொகோட்டா, கொலம்பியா: அமேசான் காட்டில் சிறிய விமான விபத்தில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 பழங்குடியின குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 மாத குழந்தை உட்ப 4 குழந்தைகள்  வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அதிகாரிகள் அறிவித்தனர். குழந்தைகள் இப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள் என அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, கியூபாவில் இருந்து பொகோடா திரும்பியதும் செய்தியாளர்களிடம் கூறினார். இளம் சிறுவர்கள் உயிர் பிழைத்த இந்த அதிசயக் கதை "வரலாற்றில் நிலைத்திருக்கும்" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தைகள் எப்படி இத்தனை நாட்கள் உயிர் பிழைத்தார்கள் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. மே 1 ஆம் தேதி அதிகாலையில் 6 பேர் பயணம் செய்த, செஸ்னா சிங்கிள் எஞ்சின் ப்ரொப்பல்லர் விமானம் விபத்து ஏற்பட்டது. என்ஜின் செயலிழந்ததால்  விமானி அவசரநிலையை அறிவித்தார். சிறிது நேரம் கழித்து சிறிய விமானம் ரேடாரில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடங்கியது. விபத்து நடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மே 16 அன்று ஒரு தேடுதல் குழு விமானம் அடர்த்தியான காட்டுப் பகுதிக்குள் விமானத்தின் உடைந்த பகுதிகள் இருப்பதை தேடுதல் குழு கண்டறிந்தது. மழைக்காடுகளின் பகுதி விமானத்தில் பயணம் செய்த மூன்று பெரியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் பயணம் செய்த சிறு குழந்தைகளை எங்கும் காணவில்லை.


எனவே, அவர்கள் உயிருடன் இருக்க கூடும் என்று உணர்ந்த கொலம்பியாவின் இராணுவம் குழந்தைகளை கண்டு பிடிக்கும்  பணியை தீவிரப்படுத்தியது. 13, 9, 4 வயது மற்றும் 11 மாத வயதுடைய நான்கு உடன்பிறப்புகளைக் தேடும் பணியின் 150 வீரர்களை நாய்களுடன் அந்தப் பகுதிக்கு அனுப்பியது. பூர்வீக பழங்குடியினரைச் சேர்ந்த டஜன் கணக்கான தன்னார்வலர்களும் தேடலுக்கு உதவினர். வெள்ளிக்கிழமை, இராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தேடுதல் குழு குழந்தைகளை கண்டு பிடித்தத்தை காட்டும் படங்களை ட்வீட் செய்தது. குழந்தைகள் வெப்பப் போர்வைகளால் போர்த்தப்பட்டிருப்பதையும், சிப்பாய்களில் ஒருவர் சிறிய குழந்தையின் உதடுகளில் ஒரு பாட்டிலைப் பிடித்து பாலூட்டுவதையும் அதில் காண முடிந்தது. 


விமானப்படை பின்னர் ட்விட்டரில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளது, வீரர்கள் குழந்தைகளை ஹெலிகாப்டரில் ஏற்றுவதைக் காட்டும் வீடியோ பகிரப்பட்டது. விமானம் சான் ஜோஸ் டெல் குவேரியார் நகருக்குச் சென்றதாக தகவல் அளிக்கப்பட்டது, ஆனால் கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


"எங்கள் ஒருங்கிணைந்த முயற்சி இதை சாத்தியமாக்கியது" என்று கொலம்பியாவின் இராணுவக் கட்டளை தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டது. முன்னதாக, தேடுதலின் போது, மூடுபனி மற்றும் அடர்த்தியான இலைகளால் தெரிவுநிலை மிகவும் குறைவாக இருக்கும் பகுதியில், குழந்தைகளை உயிர் இது வாழ உதவும் வகையில், ஹெலிகாப்டர்களில் இருந்த வீரர்கள் உணவுப் பெட்டிகளை காட்டில் போட்டனர். காட்டின் மீது பறக்கும் விமானங்கள் இரவில் களத்தில் தேடும் குழுவினருக்கு உதவ வெளிச்சத்தை பரவ விட்டன. மேலும் மீட்பு பணியில் உள்ளவர்கள் போன்களைப் பயன்படுத்தி உடன்பிறப்புகளின் பாட்டி பதிவுசெய்த செய்தியை  ஒலிக்க செய்து கொண்டே இருந்தனர். பாட்டி அவர்களை ஒரே இடத்தில் சேர்ந்து இருக்குமாறு வலியுறுத்தி வந்தார்.


மேலும் படிக்க | தொப்பை இருந்தால் ஓகே... ஆனால்... திருமணத்திற்கு நிபந்தனை போடும் அழகி..!!


நான்கு குழந்தைகளும், அமேசான் மழைக்காடுகளின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான அரராகுவாரா என்ற அமேசானிய கிராமத்திலிருந்து தங்கள் தாயுடன் சான் ஜோஸ் டெல் குவேரியாருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹுய்டோட்டோ மக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மழைக்காடுகளில் எப்படி வாழ்வது என்பது பற்றிய அறிவு  குழந்தைகளுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை, குழந்தைகள் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னர், விமானம் விழுந்து விழுந்த காடுகளின் தொலைதூரப் பகுதியில் சுற்றித் திரியும் நாடோடி பழங்குடியினரால் குழந்தைகளைக் காப்பாற்றியதாக அதிபர் கூறினார். மேலும், வீரர்கள் காட்டுக்குள் அழைத்துச் சென்ற மீட்பு நாய்களில் ஒன்று குழந்தைகளை முதலில் கண்டுபிடித்ததாக பெட்ரோ கூறினார். குழந்தைகளை சனிக்கிழமை சந்திப்பேன் என்று நம்புவதாக அவர் கூறினார். "காடு அவர்களைக் காப்பாற்றியது" என்று பெட்ரோ கூறினார். "அவர்கள் காட்டின் குழந்தைகள், இப்போது அவர்கள் கொலம்பியாவின் குழந்தைகள்" என்றார்.


மேலும் படிக்க | பசையால் பறிபோன பார்வை... சொட்டு மருத்து போடும் கவனமாக இருங்க மக்களே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ