ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், கருகலைப்பை அங்கீரிக்கும், சட்ட மசோதாவை நிறைற்றிய முதல் நாடாக ஆகியுள்ளது. கருக்கலைப்பு செய்வதை பெண்களின் அடிப்படை உரிமை என்பதை அங்கீகரிக்கும் சட்ட மசோதா, பிரான்ஸ் (France) நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 பேரும், எதிராக 72 பேரும் வாக்களித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை அடுத்து எழுந்த கண்டன குரல்கள்


பிரான்ஸ் நாட்டில், கருக்கலைப்பு செய்வதை அடிப்படை உரிமையாக ஆக்க வேண்டும் என்று, கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு, பெண்கள் கருக்கலைப்பு செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று அமெரிக்க நீதிமன்றம் (America) ஒன்று தீர்ப்பளித்த நிலையில், பிரான்சில் உள்ள பெண் செயல்பாட்டாளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். 


சிறப்பு கூட்டத்தில் அமல்படுத்தப்பட்ட கருக்கலைப்பு மசோதா


பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, சிறப்பு கூட்டத்தில் கருக்கலைப்பு உரிமையை வழங்கும் மசோதா அமல்படுத்தப்பட்டது. ஐந்தில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால், மசோதா நிறைவேற்றப்படும் இன்று இருந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை வாக்கெடுப்பு பிரெஞ்சு அரசியலமைப்பின் 34 வது பிரிவில் "ஒரு பெண்ணுக்கு கருக்கலைப்பு குறித்து முடிவு செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை சட்டம் தீர்மானிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அபுதாபி இந்து கோயில்... ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்..!


தலைநகர் பாரிசில் திரண்ட மக்கள்


கருக்கலைப்பு உரிமையை அங்கீகரிக்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறி உள்ள நிலையில், தலைநகர் பாரிசில் திரண்ட மக்கள், இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று, கொண்டாடி வருகின்றனர். My Body My Choice என்ற தங்கள் இயக்கம் வெற்றி பெற்றதாக கூறினர்.


பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் கூறிய கருத்து


மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் ( Prime Minister Gabriel Attal), பெண்கள் அனைவருக்கும் நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானது. அதனால் அது தொடர்பாக முடிவெடுக்கும் உங்கள் உரிமையில் யாரும் தலையிட முடியாது என்பதுதான் என்றார். மேலும் வரலாற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இது மிகவும் பெருமை பெறக்கூடிய தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


சட்ட மசோதாவிற்கு எதிரான விமர்சனங்கள்


இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு, பல தரப்பில் இருந்து ஆதரவும் வரவேற்பும் தெரிவிக்கப்பட்டாலும், சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. வலதுசாரி ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். இது பெண்களின் வெற்றி அல்ல தோல்வி என வர்ணித்துள்ள சிலர், இதனால், சில குழந்தைகள் உலகை காணும் வாய்ப்பை இழக்கின்றன என்றார்.


பெண்கள் கரு கலைப்பு செய்ய, சட்டப்பூர்வ அனுமதி ஏற்கனவே, 1974 முதல் உள்ளது என்றும், அது அரசியல் அமைப்பின் கீழ் அடிப்படை உரிமையாக தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | லிம்போ ஸ்கேட்டிங்கிலும் அசத்தி தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ