சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அசீல் அல்-ஹமாத் ஃபார்முலா ஒன் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுதி அரேபியா நாட்டில் 'ஷரியத்' என்ற இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கப்படுவதால், அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியது. இதனை அடுத்து, நேற்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். 


இந்நிலையில், அபுதாபியில் ஃப்ரெஞ்ச் ஓபன் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயம் நடைபெற உள்ளது. சவுதி அரேபியாவில் அமலுக்கு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை குறிக்கும் வகையில், இந்த பந்தயம் தொடங்கும் முன், சவுதி அரேபியா கார்பந்தய அமைப்பின் முதல் பெண் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ள அசீல் அல்-ஹமாத் (Aseel Al Hamad) ஃபார்முலா ஒன் காரை ஓட்டினார். 


அவர் ஓட்டிய கார் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் முதலிடம் பிடித்த கிமி ராய்க்கோனென் பயன்படுத்திய கார் என்பது குறிப்பிடத்தக்கது.