புதுடெல்லி: ஒரு கொடூரமான சம்பவத்தில்,  நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், வெள்ளிக்கிழமை பிற்பகல் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குற்றம் சாட்டப்பட்டவர், யார் என இன்னும் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, தலையை வெட்டுவதற்கு முன்னர் "அல்லாஹு அக்பர்" என்று கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை கைது செய்ய முயன்றபோது, அவரை போலீசார் சுட்டனர். பின்னர், அவர் படுகாயம் காரணமாக மரணமடைந்தார்.


பிரெஞ்சு ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், ‘பயங்கரவாத தாக்குதல்’ என்று அதிபர் மேக்ரோன் (Macron) கூறினார். மேலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தனது அரசு விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.


"நமது சக குடிமக்களில் ஒருவர் இன்று கொலை செய்யப்பட்டார், ஏனெனில் அவர் மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை கற்பித்தார்," என்று மக்ரோன் வெள்ளிக்கிழமை மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.


"அமைதியை குலைக்க விரும்பியதால் இந்த பயங்கரவாதி கொல்லப்பட்டார். நமது குழந்தைகளை சுதந்திர குடிமக்களாக மாறக்கூடாது என நினைத்த பயங்கரவாதி கொல்லப்பட்டார்," என்று அவர் மேலும் கூறினார்.


பயங்கரவாதிகள் பிரான்ஸை பிளவுபடுத்த திட்டமிடுகிறார்கள். அந்த திட்டம் ஒரு போதும் வெல்லாது என மக்ரோன் வலியுறுத்தினார்.


"இன்றிரவு, பிரஞ்சு குடியரசு தனது ஆசிரியரை இழந்துள்ளது. அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்" என்று கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் ட்வீட் செய்துள்ளார்.


முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்ட் "ஒரு ஆசிரியரின் பயங்கரமான படுகொலை" என்று இதனை கண்டித்தார். 2015 ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஹாலண்டில், பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அது நாட்டை உலுக்கியது“ பயங்கரவாதத்தை  எதிக்க நாம் ஒன்று பட்டு போராட வேண்டும்.


ALSO READ | US Election: ஜோ பிடன், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் ஒபாமா..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe