மோடியை சந்தித்த பின்பு காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்
ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கூறிவந்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மோடியை சந்தித்த பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டார்.
பியாரிட்ஸ்: ஜி-7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பியாரிட்சில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா உறுப்பினராக இல்லாத போதும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனிபட்ட அழைப்பு ஏற்று பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இன்று அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜம்மு-காஷ்மீர் குறித்து தெளிவான செய்தியை கூறினார். அவர் கூறியது, "எந்த நாட்டின் விவகாரத்திலும் நாங்கள் தலையிட மாட்டோம், எனவே எங்கள் நாட்டின் உள்விவகாரம் மற்றும் இருதரப்பு விவிவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று பிரதமர் மோடி கூறினார். மேலும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான உரையாடலின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை நான் இங்கு உங்களுக்கு நினைவுப் படுத்த விரும்புகிறேன் என்றும் கூறினார்.
பிரதமர் மோடியின் பேசுக்கு பிறகு, டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது நிலையை மாற்றினார். அதாவது, ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகள் இடையிலான பிரச்சினை ஆகும். இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர பிரச்சினைகளைத் தாங்களே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார் என்றும் டிரம்ப் கூறினார்.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கூறிவந்த அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகள் இடையிலான பிரச்சினை என்று கூறியிருப்பதன் மூலம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.